அவள் எப்போதுமில்லாத
பெயரொன்றை உச்சரிக்கையில்
உதடு கடித்தாள்.
யாராக இருக்கும் எதற்கந்த
உதடு கடிப்பு என்று
குழம்பித் தவித்தேன்.
இருவருக்குமிடையே பெருகிய
இடைவெளியில் கசப்பின் மணம்
தவழ்ந்தபோது
கருவுற்ற செய்தி மொழிந்தாள்.
மெளனம் உடைந்து
வித்திற்கான பெயர்த் தேடல்
துவங்கிய மறுகணம்
பெயரொன்றை உச்சரித்தாள்..
உதடு கடித்திடாத
அந்த உச்சரிப்பில்
ஏதோவொன்றை தேடி
தோற்றேன் நான்.
அந்த உச்சரிப்பில்
ஏதோவொன்றை தேடி
15 comments:
கவிதையில் ஒரு பொய்மையையும் அதை கண்டு பிடித்துவிட்ட உங்கள் ஆற்றாமையிலும் வேறொன்று தெரிகின்றது
azhagana varigal
Boss,
Kalakkitteenga Boss..
அருமையான கவிதை.
நன்றி லாவண்யா,நிறன்,சோல்..,கல்யாணி.
புதுக்கவிதை கை வந்த கலையாயிற்றே நிலாவுக்கு, நல்லாயிருக்கு
superunga ....
அழகான கவிதை நிலா....
அருமையான கவிதை
sabaash.....:)
இன்றைய இளைஞர்களின் மிக பெரிய சாபம் சந்தேகத்திறக்கான சூழ்நிலை. ஒரு நிகழ்வு நடந்திருக்குமோ எனும் சந்தேகம் நடந்த பின் நிகழும் துக்கத்தை விட அதிக பாதிப்பை கொடுக்கும். அழகான கவிதை.
நல்லாருக்கு பாஸ்..
Nandri nanbargalae..
எவ்வளவு அழகா எழுதி இருக்கீங்க...
ரொம்ப நல்லா இருக்கு...
Excellent........................
Post a Comment