இறுகப் பற்றியிருந்த
சவ்வு மிட்டாய்
உருகி வழிந்துகொண்டிருக்க
அம்மாவுக்கு காண்பிக்க
பத்துக்கு பத்து வாங்கிய சிலேட்டு
நெஞ்சோடு ஒட்டியிருந்தது.
சுவைத்த மிட்டாயின்
மிச்சம் இதழோரம் வழிய
ஜன்னல் தெறிக்கும்
மெல்லிய சாரலில்
நனைந்தபடி பயணித்தான்
அச்சிறுவன்.
கட்டுப்பாட்டை இழந்த
பள்ளி வாகனம்
நீருக்குள் பாய்வதற்கு
இரு நிமிடங்களுக்கு முன்.
17 comments:
மனம் கனக்கச் செய்கிறது நிலா...
migavum arumai.. kangal neer sindhukiradhu...
:'(((
உலகத்தில் நடக்கும் சாவுகளை செய்தியை பார்க்கும் மனநிலை நம்மிடம் அதிகரித்துகே கொண்டிருக்கும் நிலையில் இதைப் போன்ற எழுத்துக்கள் தான் நம்மை சிந்தித்து செயில்பட வைக்கிறது. மிக்க நன்றி நிலா.
சமீப நிகழ்வை பதித்திருக்கும் கவிதை. அருமை என்று சொல்ல முடியவில்லை
ஏன் இப்படி? கவிதையை வாசிக்கும்போது மனதினுள் விரியும் காட்சிகள் நடுங்க செய்கின்றன.
வலிகளை வார்த்தை படுத்தியிருக்கிறீர்கள்
கடைசி வரிகளில் அப்படியே பதறவச்சிடீங்க.. :-((
thalaippu azhagaa yirukku..!
நிலவுகளை சிதைத்து நாட்களாகாத நிலையில் உங்கள் கவிதை.
கவிதை அருமை என்று சொல்ல முடியாத மனநிலை..!
பள்ளிக் குழந்தைகளை அள்ளிக் கொடுப்பது வாடிக்கையாகிவிட்ட வேதனை.
உங்களின் வேதனை வரிகளில் வலி தெரிகிறது.
அற்புதம் நிலா.. கண்ணைவிட்டு காட்சி மறைய மறுக்கிறது :-(
very thouching..
சொல்ல முடியவில்லை
கவிதை படிக்கும் பொழுது அத்தனை வலி
கண்கள் கலங்கியேவிட்டது நிலா
சில நிமிடங்கள் ஸ்தம்பிக்க செய்தது உங்கள் வரிகள்...
கொடூரமான அந்த நிகழ்வை போலவே.
சற்றே மனம் கனக்கிறது.. இருப்பினும்,
திரும்ப திரும்ப படிக்க வைக்கிறது நிலா..
கண்ணீர் சுரக்கிறது கண்களில்... சர்வசாதாரணமாக ஒரு சுமையைத் தூக்கி நெஞ்சில் வைத்துவிட்டீரே நண்பரே....
Post a Comment