Thursday, December 17, 2009

நகுலன் வீட்டில் யாருமில்லை,அகநாழிகை,மற்றும் சில






1.எஸ்.ராவின் "நகுலன் வீட்டில் யாருமில்லை" தருகின்ற உள்-அனுபவம் அலாதியானது.தும்மலோசை,புனிதப்பூனை,ந.வீ.யாருமில்லை,பெருநகரத்தவளைகள்,ரப்பர் பந்து,பகலின் முதுகு கதைகள் வாசித்து முடித்து சில நிமிடங்களுக்கு வேறெதுவும் செய்ய முடியவில்லை(அடுத்த கதைக்குள் நுழைய அவகாசம் தேவைப்பட்டது).வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன் குறிப்பிட்டது போல தமிழுக்கு எஸ்.ரா தந்திருக்கும் கொடை இப்புத்தகம். விலை.ரூ.80,பக்கம் 135,வெளியீடு உயிர்மை பதிப்பகம்

2.அகநாழிகை இரண்டாவது இதழ் வெளிவந்துவிட்டது.கவிஞர்.மனுஷ்ய புத்திரனின் நேர்காணல் பொறி பறக்கிறது. லஷ்மி சரவணக்குமாரின் சிறுகதை(சற்றே பெரிய) அற்புதமானதொரு படைப்பு.ஒரு வனத்தின் காட்சிகள் கண் முன் விரிகின்றன.நதியலையின் மொழிபெயர்ப்பு கவிதையும் திலகபாமாவின் கவிதையும் அதிகம் கவர்ந்தன.இதழின் அட்டைப்படம் Superb!

3.கிரிக்கெட் உலகிற்கு இரண்டு இளம் சச்சின்கள் புயல்கள் கிடைத்திருக்கிறார்கள். பாகிஸ்தானின் உமர் அக்மல் மற்றும் மேற்கு இந்திய தீவுகளின் பரத்.
விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தி இருக்கிறார்கள்.இந்தியாவுக்கு செளராஸ்ட்ராவின் புஜாராவை எதிர்பார்க்கலாம்.

4.சேத்தன் பகத்தின் 2 States நாவலில் சென்னை குறித்தான பார்வையும் சில கெட்டவார்த்தைகளும் முகச்சுழிப்பை தருகிறது(நிதர்சனம் என்றபோதும்). இவரது இரண்டாவது நாவலின் விறுவிறுப்பு மற்ற எந்த நாவலிலும் இல்லை. ஆனாலும் தொடர்ந்து விற்பனையில் நம்பர் 1.காரணம் இளவட்டங்கள்.:)

5.வருகின்ற ஞாயிறு(டிசம்பர் 20) என் சிறுகதை நூல் வெளியீடு.பதிவ/வாசக நண்பர்கள் அனைவரையும் நட்புடன் வரவேற்கிறேன்.

-நிலாரசிகன்

12 comments:

said...

வாழ்த்துகள் நிலா!

said...

நன்றி மீனாம்மா :)

said...

வாழ்த்துக்கள் நிலா,சிறுகதை போட்டி இரண்டாம் பரிசிற்கும் சிறு கதை தொகுப்பிற்கும்!

பகிரலுக்கு நன்றி.

said...

புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள் நிலா !!!

சென்னையில் இருந்திருந்தால் கண்டிப்பாக வந்திருப்பேன்.புத்தக கண்காட்சியில் சந்திப்போம்.

எஸ்.ரா வின் நூல் குறித்த பகிர்வுக்கு நன்றி !!

said...

வாழ்த்துக்கள்!

said...

நன்றி பா.ரா,அ.மு.செய்யது :)

said...

Nila,
Kadantha irandarai varudangalaaga naan ungalathu kavithai thoguppukkalai padithu varugirean. Ungalathu kavithaigal anaithum arumai. Miga yathaarthamana varigal. Itthanai naatkkalaaga (varuddangalaaga :) ) pirar thangalathu padaippugalai paarattuvathai paarthu irukkirean. Ennai pol ethanai ethanayo rasigaigal thangalukku undu...

Yeno indru thaan ungalin rasigai naan yena thangalukku theriya padutha vendum endru thondritru...

Yethanayo kavithaigal enathu intha iyandira vaazhvilirunthu enakku viduthalai alithirukkirathu...

Ippadikku,
Thangalin visiri endru koora perumai padum (pattirukkum :)) - Priya

said...

நல்ல பதிவு ........

said...

வாழ்த்துகள்

said...

வாழ்த்துக்கள் நிலா, உடன் சுடச்சுட எஸ்.ரா புத்தக பகிர்வுக்கும் நன்றி.

said...

சிறுகதை நூல் வெளியீட்டிற்கு வாழ்த்தும் வரவேற்பும்

said...

நன்றி இராஜ ப்ரியன்,டி.வி.ஆர் ஐயா,அமித்து அம்மா,நாய்க்குட்டி மனசு :)

நன்றி ப்ரியா..தொடர்ந்து வாசியுங்கள் :)