நேற்று மாலை சிறுகதை நூல்வெளியீடு சிறப்பாக நிகழ்ந்தேறியது. மாலை 6 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சில் 27 நூல்களை திரிசக்தி பதிப்பகம் வெளியிட்டது. இசைக்கவிஞர் ரமணன் அவர்கள் சிறப்பாக தொகுத்தளித்தார். காவல்துறை உயர் அதிகாரி திரு.இரவி என் நூலிற்கான அறிமுகத்தை மிகச்சிறப்பாக எடுத்துரைத்தார். எழுத்தாளர் இந்துமதி நூலை வெளியிட்டார். எழுத்துலக ஜாம்பவான்கள் நாஞ்சில் நாடன்,புஷ்பா தங்கதுரை,விக்கிரமன்,கவியோகி,பிலிம் நியூஸ் ஆனந்தன் என்று பலரும்
விழாவில் கலந்து கொண்டது மகிழ்வாக இருந்தது.
விழாவில் கலந்து கொண்ட நண்பர்கள் விழியன்,கிருஷ்ண பிரபு,முத்துசாமி,முத்தலிப்,விஷ்ணுகுமார்,சிவன்,படைப்பாளி,சுரேஷ்,சுகந்தராஜ்,அடலேறு,எவனோ ஒருவன்,லக்கிலுக்,அதிஷா,பரமேஸ்வரன்,நாவிஷ்செந்தில்குமார்,ஆனந்தகுமார்,உமாஷக்தி,யோசிப்பவர்,சுந்தர்,விஜி,ப்ரியா,ரோகினி,குமார்,பேராசிரியர் செல்வகுமார்,குகன்,கவிஞர்.அண்ணா கண்ணன்,ஐயா அப்துல் ஜப்பார்,எழுத்தாளர் சைலஜா ஆகியோருக்கும்,விழாவில் கலந்துகொள்ள நினைத்து இயலாமல் மடலிலும் அலைபேசியிலும் வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியும் நட்பும் எப்போதும்.
சில நெகிழ்வான சம்பவங்களால் இந்நிமிடமும் மனம் பூரிப்புடன் இருக்கிறது.
சம்பத் என்றொருவர் என் க(வி)தைகள் படித்துவிட்டு மடலிடுவார். அவர் ஏதோ இருபது இருபத்தைந்து வயதுக்காரர் என்றே எண்ணியிருந்தேன். நேற்று ஒரு அறுபது வயது பெரியவர் என்னருகே வந்து கரம்பற்றி “உங்களை பார்க்கணும்னுதான் தம்பி வந்தேன்…என் பெயர் சம்பத்” என்றபோது சிலிர்த்துவிட்டது மனம். தமிழுக்கு நன்றி சொன்னோம் இருவரும்.
அதேபோல் புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணணையாளரும் எழுத்தாளருமான அப்துல் ஜப்பார் அவர்கள் அமீரகத்தில் ஆசிப் அண்ணாச்சியுடன் இருக்கிறார் என்ற நினைப்பிலேயே அவரை விழாவிற்கு அழைக்காமல் விட்டுவிட்டேன். அவர் “குழுமங்களில் விழா குறித்தான செய்திகண்டு கலந்துகொண்டேன்” என்றபோது குற்றவுணர்வுடன் கூடிய ஆனந்த அதிர்ச்சி என்னை ஆட்கொண்டது.
விழாமுடிந்து வீட்டிற்கு வந்து இறங்கிய மறுநிமிடம் தொலைபேசிய முத்துசாமி,சிவன்,முத்தலிப் அனைவரும் அதற்குள் சிறுகதை தொகுப்பை படித்துவிட்டதாக சொல்லி சிறுகதைகள் குறித்துபேசிய போது இதயம் நெகிழ்ச்சியால் நிறைந்துபோனது.
ஈரோடு பதிவர் சந்திப்புக்கு சென்றுவிட்டதால் விழாவில் கலந்துகொள்ள முடியாத கவிஞர்.கேபிள் சங்கர் இரவு 11 மணிக்கு அழைத்து வாழ்த்தியதும்,
பின்னிரவு 3 மணிக்கு நாவிஷ் செந்தில்குமார் தொகுப்பின் முதல் கதையின் பாதிப்பிலிருந்து மீளமுடியவில்லை என்று மடலிட்டிருந்ததும்,
வீடு வருவதற்குள்ளாகவே விழாவில் எடுத்த புகைப்படங்களை மடலிட்ட விஷ்ணுகுமாரின் அன்பிலிருந்தும்,
மும்பையிலிருந்து தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்த கவிஞர்.விபாகையின் நட்பிலிருந்தும் இன்னும் மீளவேயில்லை நான்.
பெருகியோடிய மகிழ்ச்சிக்கு மத்தியிலும் எழுத்தாளர்.ஷைலஜா அவர்களின் கைக்கடிகாரம் தொலைந்துபோனதும் விழா முடிந்த மகிழ்விலும் 120 பிரதிகள் விற்ற களிப்பிலும் U turn எடுக்கக்கூடாத இடத்தில் எடுத்ததால் ஒரு “நல்ல” காவலருக்கு 200 ரூபாய் கப்பம் கட்டியதும் நண்பர்கள் ஒவ்வொருவராக விழா அரங்கினுள் நுழையும்போது இப்போது வருவாரா இப்போது வருவாரா என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து கடைசி வரை வராமல் போன ஒரு நல்லவரின் நேசமும் மனதை நெருடிய விஷயங்கள்.
பின்குறிப்புகள்:
1.நன்றி நவிழ்தலில் என் மறதியால் யாருடைய பெயராவது விடுபட்டிருப்பின் மன்னித்து மறந்துவிடுங்கள் :)
2.சிறுகதை நூல் இணையம் வழியே கடன் அட்டை மூலமாக பணம் செலுத்தி வாங்கிக்கொள்ள விரும்பும் அன்பர்கள் இங்கே சுட்டுங்கள்.
3.சென்னையில் டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை நடைபெற இருக்கும் புத்தக கண்காட்சியில் திரிசக்தி பதிப்பகத்தாரின் கடை எண் 207,208,223,224ல் சிறுகதை தொகுப்பு இடம்பெற்றிருக்கும்.
மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் என் நன்றி :)
நன்றியில் நீராடும் விழிகளுடன்,
- நிலாரசிகன்.
20 comments:
வாழ்த்துக்கள் நண்பரே.
வாழ்த்துக்கள் நிலா.. 120 எல்லாம் ஜுஜுபி.. நிச்சயம் செகண்ட் எடிஷன் உண்டு..:)
எனது நெஞ்சம் நிறைந்து வாழ்த்துக்கள் நண்பா.. ஞாயிறு கூட படபிடிப்பு இருந்த காரணத்தால் என்னால் வர முடியவில்லை.. மன்னிக்கவும்...
sorry anna ennal vara mudiyala... am eager to read ur book....
மேலும் உங்களின் படைப்புகள் அரங்கேறட்டும்...
நிலாவிடம் தொலைபேசியபோது, குடுத்த காசுக்கு வொர்த்தா? என்று கேட்டார். நான் இன்னும் சில எழுபதுகளை அவருக்கு கடன் பட்டிருக்கிறேன்.
வெறும் எழுபது ரூபாயில் பதினேழு பல்வேறு வகைத் தளங்கள் சுற்றி வந்த அனுபவம் நன்றாக இருந்தது. தமிழ் படிக்கத் தெரிந்த எல்லோரும் தவறாமல் படிக்கலாம் இந்த நூலை. நீங்கள் மேலும் மேலும் எழுதி சிறப்பு செய்ய வாழ்த்துகிறேன்
வாழ்த்துக்கள். புத்தகத்தை வாங்கி வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.
வாழ்த்துகள் நிலாரசிகன்...விரைவில் வாசிக்கிறேன்...
-ப்ரியமுடன்
சேரல்
உங்களுடைய கதைகளை கொஞ்சம் கொஞ்சமாக படித்துக் கொண்டிருக்கிறேன். நண்பர் சதீஷுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவருடைய புத்தக வெளியீட்டிற்குக் கூட இந்த மாதிரியான அழைப்பு விடுப்பாரா என்று தெரியவில்லை! உங்களுடைய முன்னுரையில் அவரைப் பற்றி குறிப்பிட்டிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
உங்களை ஆரம்பத்திலிருந்து ஊக்கப்படுத்தும் அனைவரது எதிர்பார்ப்பையும், நீங்கள் அடையத் துடிக்கும் உச்சத்தையும் உங்களுடைய படைப்புகளின் மூலம் இனி வரும் காலங்களில் அடைய எனது வாழ்த்துக்கள். அதற்கான கடுமையான உழைப்பை மேற்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
என்னை ஞாபகத்தில் வைத்து குறிப்பிட்டமைக்கு நன்றி... மீண்டும் ஒரு இனிய பொழுதுகளில் சிந்திப்போம்...
வாழ்த்துகள் நிலா. ஈரோடு பதிவர் சந்திப்புக்கு சென்று விட்டதால் வர இயலவில்லை. மிகவும் வருந்துகிறேன்.
இன்னும் பல சிகரங்களை தொட வாழ்த்துகள்.
தங்களின் சிறுகதை புத்தகம் படித்தேன். எனக்குள் பல்வேறு உணர்வுகள் தோன்றினாலும். ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கொள்ள விழைகிறேன்.
தூவல் கதையில் வரும் அந்த நாயகனை (அவர் நாயகனா???) போலவே பேனாவின் மேல் எனக்கும் காதல் ஏற்பட்டு விட்டது.
நிலா ரசிகன் போன்றோரின் பேனாக்கள் மீது கள்ளக் காதல் ஏற்பட்டு விட்டது. கள்ளக் காதலில்தான் கிக் அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்...
செ.சரவணக்குமார் கேபிள்ஜி,ஜாக்கிஜி,காயத்ரி மஹாதேவன்,முத்துசாமி,ராமலஷ்மி அம்மா,சேரல்,கிருஷ்ண பிரபு,சூர்யாஜி,தம்பிராஜா...அனைவருக்கும் நன்றி :)
வாழ்த்துகள் நிலாரசிகன்.
வாழ்த்துகள் நிலாரசிகன்.
இது முதல் படிக்கல் நிலாரசி, மேலும் உயர வாழ்த்துகள்.
வரமுடியாமல் போனது நிலா.. வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் நிலா....
--
குமார்.S
வாழ்த்துகள் நிலா.
வாழ்த்துகள் நண்பா :)
VAAZHTHTHUKAL....NILA!
Post a Comment