Wednesday, December 23, 2009

கோணவாயன் கதை - உரையாடல் போட்டிக்கவிதை


 
அப்பன் செம்பட்டையும்
ஆத்தா செவ்வந்தியும் மூணாவதா
பெத்துப்போட்ட கழுதக்குட்டி நானு.
மொத ரெண்டு புள்ளயும்
கிடாவாகிபோனதால  மூணாவது பொறந்தா
பொட்டப்புள்ளதான் பொறக்குமுன்னு
எங்காத்தா நெனச்சிபுட்டா.
குஞ்சான ஆட்டிகிட்டு குறுகுறுன்னு
வந்துவிழுந்த என்ன,
பொட்டப்புள்ளபோல வளக்க ஆரம்பிச்சா.
ட்ரவுசருக்கு பதிலா பாவாட மாட்டிவிட்டு
பவுடருக்கு பதிலா மஞ்சளையும் தேச்சுவிட்டு
அழகு பாத்தா ஆத்தாக்காரி.
திக்கி திக்கி பேசுறதால பேய்க்காமன்கற
எம்பேர கோணவாயன்னு
ஊருக்குள்ள மாத்திபுட்டானுவ.
கோணவாய் பயன்னு
ஊரெல்லாம் மென்னு துப்புனப்போ
அடுத்தவீட்டு  மாரி  மட்டும்
தோளோட தோளு நின்னான்.
என்னோட நண்பனா
உசிரோட ஒட்டிக்கிட்டான்.
அவனுக்கு மீசை மொளக்கற
வயசுல
அவன் மேல ஆச மொளச்சுது.
நாளாக நாளாக
உடம்புக்குள்ள
ஏதேதோ மாறிப்போச்சு.
ராவெல்லாம் அவன் நெனப்பா
தூக்கத்துல உளரி கெடந்தேன்
அவனுக்கே வாக்கப்பட்டு
வாழனும்னு கங்கணம் கட்டிக்கிட்டேன்.
சிவனா பொறந்தவன் சக்தியா
மாறிப்போனேன்.
வளஞ்சு நெளிஞ்சு வெட்கத்தோட
நான் பேச
தோளோட தோள் நின்னவன்
தொலைதூரம் போக ஆரம்பிச்சான்.
ஓடக்கர கோவிலுல மழ ஓஞ்ச
ஒருநாளுல “கட்டிக்குவியா”ன்னு
கேட்டுபுட்டேன்.
“சீ போடா ஒம்போது”ன்னு
மூஞ்சிமேல எச்சி துப்பி புட்டான்.
உசிரு ஒடஞ்சு ஊசலாட
ராவோட ராவா
நாம்போறேன் ரயிலேற.
-நிலாரசிகன்.


49 comments:

said...

congrats anna....

unga book intha weekend vaanga than poren...

said...

நல்லா இருக்குங்க நிலா :) வாழ்த்துக்கள்..))

said...

வேதனையான கதை அருமையான கவிதையாய். வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!

said...

Nice one...

said...

க‌விதை ந‌ன்று வெற்றி பெற‌ வாழ்த்துக‌ள் நிலார‌சிக‌ன்

said...

உங்களின் வெற்றி உறுதியாகிவிட்டது நிலா.

ஏற்கெனவே வித்யாவின் புத்தகம் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மீள முடியவில்லை.அதற்குள் உங்கள் கவிதை.

இந்த ஒரு கவிதை உங்களை வெகு உயரத்திற்கு கொண்டு சேர்க்கும்.

said...

அருமையாக இருக்கு...
//அடுத்தவீட்டு மாரி மட்டும்// நானில்லீங்கோ...

said...

வாழ்த்துக்கள் தல!

திருநங்கைகள் குரோம்சோம்கள் பிரச்சனையால் உருவாகுபவர்கள்!, இவர்கள் வேறு!

said...

நல்லா இருக்கு நிலா. வாழ்த்துகள்!

said...

கண்முன்னே ஒரு திருநங்கையை நிறுத்துகிறது கவிதை. வெற்றி பெற வாழ்த்துகள்.

said...

அருமை நிலாரசிகன்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

said...

திருநங்கைகளின் அவலத்தை சுட்டி இருக்கிரீர்கள்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்

said...

வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். :)

said...

வேதனையாய் இருந்தது.
ஒரு மனிதனின் உணர்வுகள் சுற்றி இருப்பவர்கள் செயலால் எப்படி எல்லாம் மாறுகிறது னு அழகா சொல்லு இருக்கீங்க
வாழ்த்துக்கள்.

said...

மனதிற்கு கனம் சேர்க்கும் கவிதை. கிராமத்தில் மட்டுமல்ல நகரத்தில் தான் இது போல கதைகள் அதிகமாக இருப்பதாக நினைக்கிறேன். படித்தவுடன் தாக்கம் ஏற்படுத்தும் கருவை எடுத்துக் கொண்டதற்கு வாழ்த்துக்கள். வெற்றி பெறுவீர் என்று தனியாக வேறு சொல்ல வேண்டுமா என்ன ? :P

said...

unarvai veli paduthukira kavidhai:)

said...

CONGRATULATIONS NILARASIGAN.
(நிச்சயம் வெற்றிதான் -- வேறென்ன - அதான் இப்பயே முதல் வாழ்த்து என்னுது..)

said...

வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துகள் நிலா...

said...

அருமை

said...

ரொம்ப பிடிச்சிருக்கு நிலா!

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

said...

வெற்றி பெற‌ வாழ்த்துக‌ள்

said...

க‌விதை ந‌ன்று.வெற்றி பெற‌ வாழ்த்துக‌ள்.

said...

வாழ்த்துக்கு நன்றி நட்புள்ளங்களே..

said...

awesome NilaRasigan..:-)

said...

Awesome kavidhai Hearty wishes to u Nila rasigan...:-)

said...

Onnum solrathukkilla sir..
Romba romba painfullana poem..
And nadai alagu...
vaalthugal..

said...

vetri pera vazhthukkal nilaraseegan....
kavithai nala irukku....

said...

வாழ்த்துக்கு நன்றி :)

said...

அருமையான கவிதை
நல்ல நடை
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

said...

PAAVAMLA....:(

said...

நான் பொருமியதுண்டு திரு நங்கையர்களை பற்றி...
ஆனால் நீங்கள் வடித்து விட்டீர்கள் கவிதையை..மன்னிக்கவும் கண்ணீரை..?!

said...

மிக அருமை வெற்றி பெற வாழ்த்துகிறேன்

said...

பல சமயம் அழகியலில் அதிகம் மூழ்காத எளிமையான நேரடியான பொட்டில் அறைந்தார் போன்ற கவிதைகள் நம்மை அதிகம் பாதிக்கும்.. அதக்கியாக கவிதை இது.. மீண்டும் மீண்டும் அசை போட வைத்தது..
நன்றி மற்றும் வாழ்த்துகள்..

said...

பல சமயம் அழகியலில் அதிகம் மூழ்காத எளிமையான நேரடியான பொட்டில் அறைந்தார் போன்ற கவிதைகள் நம்மை அதிகம் பாதிக்கும்.. அதக்கியாக கவிதை இது.. மீண்டும் மீண்டும் அசை போட வைத்தது..
நன்றி மற்றும் வாழ்த்துகள்..

said...

பேச்சு நடையில் ஒரு கலக்கல் கவிதை. வெற்றி பெற வாழ்த்துக்கள் நிலாரசிகன்

said...

அருமை...
மனது கனக்கிறது....

said...

nice poem nila sir,

ஆத்தா செவ்வந்தி
பொட்டப்புள்ளபோல வளக்க ஆரம்பிச்சா.

this poem is starting like a normal story..

but it turns after some lines..

shows some reality..

so finally boy got this stage..

mother may be the reason for this change..

situation is different..
reason is different..

nice title..

said...

வித்யாசமா கவிதை நல்லா இருக்கு

said...

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்!

அன்புடன்
உழவன்

said...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் நிலா! :-)

said...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் நிலாரசிகன்!

-ப்ரியமுடன்
சேரல்

said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் நண்பரே...

said...

வாழ்த்துக்கள்:)!

said...

வெற்றிபெற்ற உங்களின் கவிதையை இப்பொழுதான் வாசிக்கிறேன்.. எத்தனை வலிமையும் வலியும் தாங்கிநிற்கிறது... வாழ்த்துக்கள் நண்பரே....

said...

vidyaasamaana sinthanai..

said...

வெற்றிபெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....

said...

வெற்றிபெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....

said...

Romba nalla elithu irukinga. congrates