1. பதிவர்களின் பேட்டியை நண்பர் ஆதி தொகுத்திருக்கிறார்
இங்கே படிக்கலாம்.
2. கவிஞர்.அம்சப்ரியாவின் இந்தக் கவிதை மிகவும் கவர்ந்தது.
"எந்த வகைப் பறவையென்று
தெரியவில்லை.
வழி தெரியாமல் வகுப்பறைக்குள்
வந்துவிட்ட அக்குஞ்சுப் பறவை
சிறகடிக்கத் துவங்கிற்று
ஒவ்வொரு குழந்தையின்
பாடப் புத்தகத்தினுள்ளும்..! '"
4. கோ.கேசவன் எழுதிய தமிழ்ச்சிறுகதைகளில் உருவம் என்ற நூலில் சிறுகதையின் உள்ளடக்கம் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். சிறுகதை எழுத விரும்பும் இணைய எழுத்தாளர்களுக்கு பயன்படலாம்.
· அடிப்படையான மூலக்கருத்து என ஒன்று இருத்தல்.இதை விளக்க வாழ்க்கையின் ஒரு சூழல்/சிக்கல்/நிகழ்ச்சி/அனுபவம்/ஆகிய இவற்றுள் ஏதேனும் ஒன்றை மட்டும் விளக்குதல்.
· குறிப்பிட்ட ஒரு சூழலில்/சிக்கலில்/நிகழ்ச்சியில்/அனுபவத்தில்/ஒரு பாத்திரம் அல்லது சில பாத்திரங்கள் இயங்கும்முறை/அவற்றின் மனநிலை/உணர்வுநிலை.
5. பதிவுலகம் அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இவ்வேளையிலும் மிக மோசமான படைப்புகளுக்கு “ஆஹோ ஒஹோ” என்று நட்புக்காக இடப்படும் பின்னூட்டங்களால் பதிவுலகை தேடி வரும் ஆரம்பநிலை வாசகன் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறான். நிஜமான விமர்சனத்தை முன்வைத்தால் அதை படைப்பின் மீதான விமர்சனமாக கொள்ளாமல் படைப்பாளியின் மீதான தாக்குதலாக புரிந்துகொள்கின்றனர். இதனால் நல்லதொரு விமர்சனமும் கிடைக்காமல் போய்விடுகிறது படைப்பாளியும் தன் படைப்பின் தவறுகளை அறிந்துகொள்ளாமல் மீண்டும் அதே தவறுகளை தொடரும் அபாயமும் இருக்கிறது. என்னை பொறுத்தவரை நிஜமான நட்புள்ளவன் முதலில் குறைகளைத்தான் சுட்டிக்காண்பிப்பான்.
8 comments:
உண்மைய சொன்னா சக பதிவர்கள்
கோச்சிக்கமாட்டாங்களா சார்..!
அம்சப்ரியாவின் கவிதை அசத்தல்..
(பிடிக்கலைன்னா ஒண்ணும் சொல்லாம போயிடறதுதான் பெட்டருன்னு தோணுது. இல்லைன்னா முதுகுல டின் கட்டிருவாங்க போலருக்குது ;) )
// தமிழ் வெங்கட் said...
உண்மைய சொன்னா சக பதிவர்கள்
கோச்சிக்கமாட்டாங்களா சார்..!//
கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை வெங்கட்.ஒரு நல்ல விமர்சனத்தால் படைப்பாளியின் திறன் செதுக்கப்படுவதாகவே இருக்கும். "ஆஹோ ஒஹோ" என்று நட்புக்காக இடப்படும் பின்னூட்டங்களால் அவனது உண்மையான திறன் மழுங்கடிக்கப்படுகிறது.
// சென்ஷி said...
அம்சப்ரியாவின் கவிதை அசத்தல்..
(பிடிக்கலைன்னா ஒண்ணும் சொல்லாம போயிடறதுதான் பெட்டருன்னு தோணுது. இல்லைன்னா முதுகுல டின் கட்டிருவாங்க போலருக்குது ;) )//
ஹ்ம்ம்ம்...என்ன செய்றது நிலைமை இப்படித்தான் இருக்கு சென்ஷி. :(
எல்லாம் ஓகே., பேட்டிங்கிற வார்த்தைக்கு முன்னால 'புத்தகங்கள் குறித்த'ன்னு சேர்த்திருக்கலாம்ல..
நன்றி பாஸ்.!
நான் நிச்சயம் சுட்டிக் காண்பிப்பேன். நிலா..
கடைசி பாயிண்ட் நிதர்சனமானது.
//என்னை பொறுத்தவரை நிஜமான நட்புள்ளவன் முதலில் குறைகளைத்தான் சுட்டிக்காண்பிப்பான்.//
yennaip poruththavaraiyum thaan...!
Post a Comment