1.
கண்ணால் மடலெழுதிக் காதல் கவிதையைச்
சொன்னாளே பெண்மை இலக்கணத்தை - மண்ணாகப்
போகும் உடலுக்கு போர்வையாய்த் தானிருக்க
ஆகுமோ? ஏந்திழையால் தான்!
2.
மல்லிகையாய் வீசும் மணம்பூசிக் கொண்டவளோ
புல்லில் மணந்தாள் புதுமலராய் - வெல்லுகின்ற
புல்லில் மணந்தாள் புதுமலராய் - வெல்லுகின்ற
பூக்கொண்டேன்! பொன்னுடம்பில் ஓடுகின்ற செந்நீரை
நாக்கொண்டால் நற்றேன் இனிப்பு.
9 comments:
தளைகள் இரண்டு...
1. //சொன்ன பெண்மை//
2. //குருதியல்ல! இனிக்கும்//
தளை தட்டுதே நிலா??
கவிதை கலக்குது...
வெண்பா நன்று.
சுபைர்,
திருத்தியாயிற்று.:)
நன்றி சங்கவி,செ.சரவணக்குமார்.
வாழ்த்துகள் நிலாரசிகன்
அன்புள்ள நிலாரசிகன்!வாழ்த்துகள்!
பாடல் நன்று!வெண்பாவில் இரண்டாம் அடியில்
ஐந்து சீர்கள் உள்ளனவே?
தனிச்சொல்லுடன் நான்கு சீர்கள்தான் வரவேண்டும்.
(நான் கற்றுக் கொண்டிருக்கும் மாணவி தான்!)
அன்புடன்,
தங்கமணி.
நிலா,
உங்களின் வளர்ச்சியை கண்டு மிகவும் பிரம்மிக்கிறேன். உங்கள் எழுத்தில் தான் எத்தனை முதிர்ச்சி. வியக்கிறேன் தோழா.
"பொன்னுடம்பில் ஓடுகின்ற செந்நீரை
நாக்கொண்டால் நற்றேன் இனிப்பு."
இந்த வரிகள் மிகவும் அருமை.
- ப்ரியா
yenakku puriyalappa....
Post a Comment