Monday, March 22, 2010

நிலாத்துளிகள்




1. கடந்த வாரம் இரு சந்திப்புகள். ஒன்று ஆங்கில வலைப்பதிவர்களின் சந்திப்பு. மற்றொன்று டிவிட்டர் நண்பர்களின் சந்திப்பு. வெகுநாட்கள் கழித்து சந்தித்த பாலபாரதி தன் பேச்சில் தூள் பறத்தினார். மீசையும் குறைவான முடியுமாக ஆளே மாறியிருந்தார். நல்லதொரு சந்திப்பு.

2.ஒரு வாரம் முடிந்துவிட்டது ஐ.பி.ல் மூன்றாவது சீசன் துவங்கி. யூசுப் பதான்,காலீஸ்,திவாரி,பாண்டே அசத்தியிருக்கிறார்கள். பஞ்சாப் Vs சென்னை இதுவரை நடந்த போட்டிகளிலேயே மிகச்சிறந்தது எனலாம்.

3.அகநாழிகையின் மூன்றாவது இதழ் நேற்று கிடைத்தது. மனுஷ்யபுத்திரனின் நேர்காணல்,அட்டைப்பட ஓவியம்,கெளரிப்ரியாவின் மூன்றாவது கவிதை,யாத்ராவின் 'இக்கணம்' கவிதை,தலையங்கம் அனைத்தும் அற்புதம். லாவண்யா தொடர் கட்டுரை எழுதலாம்.

4.அந்தப் பொய் உனக்கு
எதையும் கொண்டு வரப்போவதில்லை.
ஒரு குழந்தையின் மனதையோ
ஒரு வெண்நிற பூவின் வாசத்தையோ
அல்லது
உறக்கத்தில் நெற்றி முத்தமிடும் அன்பையோ
எதையும் அந்தப் பொய்யால்
உன்னிடம் சேர்த்திட முடியாது.
எனினும்
நீ உரைத்த அந்தப் பொய்யின்
துவக்கப்புள்ளியில்தான்
வரைய ஆரம்பித்தேன்
என்னிலிருந்து நீங்கிச்செல்லும்
பெண்ணின் ஓவியத்தை


5. ஹெய்டன் உபயோகிக்கும் மங்கூஸ் மட்டை பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. மற்ற வகை கிரிக்கெட் மட்டைக்கும் இதற்கும் வித்தியாசம் உண்டு. கைப்பிடியின் நீளம் அதிகம். 20% பவர் அதிகம். அதிரடியாக விளையாட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கீரிப்பிள்ளையின் பெயரை வைத்திருக்கிறார்கள். பாம்பையும் சீண்டும் என்பதாலா? ஹெய்டன் போன்ற குத்துச்சண்டை வீரர்களுக்கு சாதாரண கிரிக்கெட் மட்டையே போதுமானது :)

6. ஒரு குறும்படம்: http://www.youtube.com/watch?v=CJZ_CtNhtAw

7. சொற்கப்பல் மார்ச் 6ம் தேதி தன் பயணத்தை துவங்கியது. அமிர்தம் சூர்யாவின் "கடவுளைக் கண்டுபிடிப்பவன்" மற்றும் சந்திராவின் "காட்டின் பெருங்கனவு" நூல்களின் விமர்சனக்கூட்டம் நடந்தது. நல்லதொரு அனுபவம்.

8.Earth Hour குழுவிலிருந்து சிலரை கடற்கரை சந்திக்க நேரிட்டது 27 மார்ச் இரவு 8.30 முதல் 9.30 வரை மின்சார விளக்குகளையும் மின் சாதனங்களையும் அணைத்து வைக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். மேலதிக தகவலுக்கு www.earthhour.in  பார்க்கலாம்.

9.நட்பில் நம்பகத்தன்மை என்பது என்ன?

10. மேலுள்ள கேள்விக்கு சரியான பதில் அளிப்பவர்களுக்கு இப்பொழுதே நன்றி சொல்லிக்கொள்கிறேன். நன்றி.

-நிலாரசிகன்.

28 comments:

said...

குறிப்பிட்டுள்ள கவிதை யாருடையது நிலா?
நன்று.

said...

என் கவிதைதான் செல்வராஜ்.. ஏனிந்த சந்தேகம்?

said...

நட்பே நம்பகத்தன்மையில் உருவானது தானே.

சுயநலமற்ற என சொல்லலாம்.

said...

கவிதை நன்றாக இருக்கிறது.

ஆம். லாவண்யா தொடர் எழுதலாம்.

said...

Nambikkaiye vaazhkai endru kelvi pattu irukiren.

Andha nambikkaiyin adippadayil uruvaana ella uravugalilum sirandhadhu Natpu endre solluven.

Natpil Nambikkai Enbadhu: non-judgemental...

said...

நட்பில் நம்பகத்தன்மை என்பது என்ன?

நம்பகமானதா என யோசிக்காமல் இருப்பதோ , அல்லது அந்த யோசனை வாராமல் இருப்பதோ நம்பகத்தன்மை.

said...

பஞ்சாப் Vs சென்னை இதுவரை நடந்த போட்டிகளிலேயே மிகச்சிறந்தது எனலாம். //
காம்பினேஷன் அப்படி. :)

கவிதை ரொம்ப நல்லாருக்கு.

said...

கருத்துப்பகிர்வுக்கு நன்றி நண்பர்களே..

said...

கவிதை அருமை அண்ணா

said...

நட்பில் நம்பகத்தன்மை என்பது என்ன?


விளக்கி சொன்னால் பல பேருக்கு உபயோகமாய் இருக்கும்

said...

//
அந்தப் பொய் உனக்கு
எதையும் கொண்டு வரப்போவதில்லை.
ஒரு குழந்தையின் மனதையோ
ஒரு வெண்நிற பூவின் வாசத்தையோ
அல்லது
உறக்கத்தில் நெற்றி முத்தமிடும் அன்பையோ
எதையும் அந்தப் பொய்யால்
உன்னிடம் சேர்த்திட முடியாது.
எனினும்
நீ உரைத்த அந்தப் பொய்யின்
துவக்கப்புள்ளியில்தான்
வரைய ஆரம்பித்தேன்
என்னிலிருந்து நீங்கிச்செல்லும்
பெண்ணின் ஓவியத்தை
//

nalla irukku inthak kavithai....

said...

9.நட்பில் நம்பகத்தன்மை என்பது என்ன?//

inthak kelvi yennul 3 padak kaatchikalai konduvanthathu........

film 1:autograph..
athil cheranum sneha vum bus-il poittu iruppaanga.
appo oru nurse sneha-ta pesi mudiththavudan,
amaithiyaave varum cheranai paarththu,sneha yenna onnume kekka maattengira-nu keppaanga....

athukku cheran pathil solluvaaru
"sollanumnaa neengale solliyiruppeengalennu"

film 2:april maathaththil..,
athil sneha vum sreekaaanthum pesittu irukkum pothu oruththan snehakku propose seiya wait pannuvaan..

avantta yennannu sneha keppa..,thaniya pesanumnu solluvaan.

udane sneha solluva..,
"nee pona 10vathu nimishaththil ivantta nee sollurathai solleeduven.so,ivan irukkum pothey nee sollalaaamnu"

3 film:alaipaayuthey..,
shaliniyai thedi alaiyum madi-i
police station il sexual workers irukkum idaththil check seiya solluvaanga..,

appo,
"naan paakka maatten.ava anga irukka maattaanu -thirumba thirumba solluvaaru"


rasihai ithellaam cheran stanly manirathinaththoda opinion..
neenga yenna sollureengannu kekkaatheenga nila...plz:)

but,onething...
nambakaththanmai ngirathu natpu kaathal..ect-nu ovvuru uravukkum verupadaathungirathu mattum yen karuththu!

//
10. மேலுள்ள கேள்விக்கு சரியான பதில் அளிப்பவர்களுக்கு இப்பொழுதே
நன்றி சொல்லிக்கொள்கிறேன். நன்றி
//

intha nantrikku naan udaiyaval alla...:)

said...

கவிதை நன்றாக இருக்கிறது.

said...

"அந்தப் பொய் உனக்கு
எதையும் கொண்டு வரப்போவதில்லை.
ஒரு குழந்தையின் மனதையோ
ஒரு வெண்நிற பூவின் வாசத்தையோ
அல்லது
உறக்கத்தில் நெற்றி முத்தமிடும் அன்பையோ
எதையும் அந்தப் பொய்யால்
உன்னிடம் சேர்த்திட முடியாது.
எனினும்
நீ உரைத்த அந்தப் பொய்யின்
துவக்கப்புள்ளியில்தான்
வரைய ஆரம்பித்தேன்
என்னிலிருந்து நீங்கிச்செல்லும்
பெண்ணின் ஓவியத்தை"
அருமையான கவிதை நிலா.

said...

ந‌ன்றி நிலார‌சிக‌ன் :)

said...

நட்பின் நம்பகத்தன்மை?

நட்பின் மீது நம்பிக்கையோடு இருப்பதுதான்.

said...

ஜி.ஆர்.டி வரவேண்டும் என்றிருந்தேன். வர இயலவில்லை.

கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லை.

அகநாழிகை அருமையாக வந்திருக்கிறது இந்த முறை (யும்).

கவிதை அருமை. :)

குறும்படம் இன்னும் பார்க்கவில்லை.

சொற்கப்பலுக்கு வந்திருந்தீர்களா? !!!

///நட்பில் நம்பகத்தன்மை என்பது என்ன? /////
வாய்ப்பு கிடைத்தாலும் அந்த நம்பத்தன்மைக்கு மனதாலும் துரோகம் செய்யாதிருப்பது.

said...

சிறப்பா இருக்கு

said...

நட்பின் அடிப்படை நம்பகதன்மைதான் - எனினும் எல்லா நட்பிலும் ஒரு நுண்ணிய சுயநலம் இருக்கிறது. ம்ம். இப்படியும் சொல்லலாம் - நம் ரகசியங்களை பாதுகாப்பான்/ள் என்ற சுயநலமாக கூட இருக்கலாம்.

said...

நட்பில் நம்பகத்தன்மை பற்றிய அனைத்து பின்னூட்டங்களுக்கும் நன்றி.

said...

//
சொற்கப்பலுக்கு வந்திருந்தீர்களா? !!!//

விதூஷ் வித்யா,

நீங்கள் நான் சந்திரா அடலேறு பலாபட்டறை ஷங்கர் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தோம். யாரென்றே தெரியாமல் பேசியிருக்கிறீர்கள் :(

said...

//
நிலாரசிகன் said...

நட்பில் நம்பகத்தன்மை பற்றிய அனைத்து பின்னூட்டங்களுக்கும் நன்றி.
//

athellaam ok...nila.

neenga yenna ninaikkireengannu sollanumla...
sollaamale S aakureenga:)

yennai pola valavalakkaamal 1 r 2 vaarathai/varikalil solleedunga nila...ok va

(ilaati athai oru pathivaa potturunga..)

said...

நட்பில் நண்பன் மட்டுமே நம்பகமானவன்!!!...

said...

நம்பகத்தன்மையில் தான் நட்பே ஆரம்பமாகிறது. எனவே நட்பும் நம்பிக்கையும் ஒரே கோட்டில் தான் இருக்கிறது மெல்லிய இடைவெளியில்.

said...

இரசிகை,

நட்பில் நம்பகத்தன்மை என்கிற என் கேள்வியே தவறாக தோன்றுகிறது இப்போது. நம்பகத்தன்மைக்கும் நட்பிற்கும்தான் வித்தியாசமே இல்லையே?

said...

nice......:)

said...

இரசிகை,

நம்பகத்தன்மை இல்லாத ஒரு நட்பால்தான் அந்தக் கேள்வி என்னுள் எழுந்தது.அவசரமயமாகிவிட்ட இவ்வுலகில் நட்பும் கூட அவசரகதியிலேயே மிதிபடுவதாக தோன்றுகிறது.எனக்கொரு நண்பன் உண்டு. தான் விரும்பும் பொழுதுகளில் மட்டுமே பேசுவான்.நாம் பேசும்பொழுதில் செவிசாய்ப்பதே இல்லை.மேலும்,எப்பொழுதெல்லாம் பேசுகிறானோ அப்பொழுதெல்லாம் அவனைச் சார்ந்த செய்திகளை மட்டுமே பகிர்ந்துகொள்வான்.He never ask the updates from me! Is this called friedship? Am I a keyed doll or something? This raises that question.

said...

than mel vizhum ovvoru adiyaiyum thannai innum merugetri kolla payanpaduthikkum silai pola..

naamum nam vaazhvil nadakkum yella vishayangalaiyum, nam manathai nallavithamaaka pakkuvap paduththik kolluvatharkaana oru vaayippaaga yeduthukkondaal..,
yethuvum nammai sorvu paduththaathu!

santhosamaayirunga nila...:)