உடைந்த கனவுகளை பொறுக்கும் சிறுமி
உடைந்த கனவுகளை பொறுக்கும்
சிறுமியின் பாவாடையில் தீட்டப்பட்டிருக்கும்
ஓவியத்தில் இரண்டு மான்கள் வசித்தன.
தனிமையின் குரூரத்தை பாடும்பொழுதும்
குளிர் அடர்ந்த இரவில் தனித்தழும்பொழுதும்
அவளுடன் உரையாடுகின்றன
அந்த மான்கள்.
தெருவோரத்தில் உறங்கி எழும் அவள்
கனவுகள் பொறுக்கும்
அதிகாலையொன்றில் விபத்தில் மரணித்தாள்.
குழந்தை இழந்த துக்கத்தில்
கண்ணீர் விட்டன மான்கள்.
அநாதைப் பிணம் என்றபடி
முகம் திருப்பிக்கொண்டது இவ்வுலகம்.
ஏழாவது கோடை
இருண்ட இரவுகளில்
புணர்ந்து திரிந்த அப்பறவைகள்
ஆறு கோடைகள் பிரிந்திருந்தன.
ஏழாவது கோடையில் பெண்பறவை
தன் குஞ்சுகளுக்கு கதைகள் சொல்ல
ஆரம்பித்தது.
தனக்கொரு நண்பன் இருந்தானென்றும்
அவனது சிறகுகளின் கதகதப்பில்
மகிழ்ந்திருந்ததாகவும் நீண்டது அக்கதை.
காதலற்ற காமம் பற்றியும்
உணர்வுகளற்ற முத்தம் பற்றியும்
சொல்லாமல்
சொல்லாமல்
கதை முடிந்தபோது
புத்தனை சிலுவையில் அறைந்துவிட்ட
குரூரத்துடன் புன்னகையொன்றை
உதிர்க்கிறது பெண்பறவை.
-நிலாரசிகன்.
17 comments:
முதல் கவிதை அருமை!! :-)
nice......:)
நன்றி செந்தில்,இரசிகை..
வாய்ப்பே இல்ல.. ரொம்ப ரொம்ப அருமை நிலா.
சிறுமியின் முகம் கண்முன்னால் வந்து போகிறது.
அட்டகாசம் .ரெண்டு கவிதைகளும் மிக நுண்ணியமாய் உணர்வுகள் பேசுகின்றன .மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன் நான்
super and nice pa :)
ரெண்டும் ரொம்ப நல்லாயிருக்கு நிலா.
நிலா.., ரெண்டு கவிதைகளும் ரொம்ப நல்ல இருக்கு... வாழ்த்துக்கள்...
முதல் கவிதை சமீபத்தில் பார்த்த படத்தின் பாதிப்பென்று நினைக்கிறேன்.
இரண்டாம் கவிதை தலைப்பிலிருந்து அனைத்தும் அருமை
முதல் கவிதை.. படித்ததும் பிடிபடவில்லை.. மீண்டும் படிக்கப் படிக்க பிடிபட்டது அர்த்தம்..
பாராட்டுகள் நிலா.. என் வலைப்பூ வடிவத்தைப் பார்த்தோ இக்கவிதை என எண்ண வைத்தது.. ஆனால், இன்று அவ்வலைப்பூ வடிவத்தை மாற்றிவிட்டேனே... :(
உங்கள் பின்னூட்டத்தை என் கதைப் பக்கத்தில் பார்த்தேன்.. நன்றி நிலா ரசிகரே. :)
இரண்டுமே அருமை
ரொம்ப ரொம்ப அருமை நிலா.
நிலா.., ரெண்டு கவிதைகளும் ரொம்ப நல்ல இருக்கு... வாழ்த்துக்கள்...
ஆழ்த உணர்வுக் கவிதை. வாழ்த்துக்கள்
வாழ்த்திய நண்பர்களுக்கு என் நன்றி :)
முதல் கவிதை அருமை [ அந்த மான்களின் வலிகளை உணர முடிந்தது]
இரண்டாவது எனக்கு புரியவில்லை.. [ மீண்டும் படிக்க வேண்டும் ]
அருமையான மொழியாளுமை.
மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் வரிகள்.
உங்களை தொடர்ந்து வாசிப்பவர்களில் நானும் ஒருவன்.
இப்போதுதான் முதன்முறையாய் பின்னூட்டமிடுகிறேன்.
நட்புடன்,
சங்கரன்
http://shangaran.wordpress.com
Post a Comment