மழை ருசித்துக்கொண்டிருக்கும்
விசித்திரமான இரவு இது.
ஒவ்வொரு துளியாய்
மழையின் குருதியை பருகி
திளைக்கிறது இரவு.
இரவின் கண்கள் ஓர்
ஒநாயின் குரூரத்தை கொண்டிருக்கின்றன.
புலன்கள் ஒடுங்கிய அறைக்குள்
கனவுகளின் மரணச்சத்தம்
மெளனமாக ஒலிக்கும் தருணம்
மழையின் ஈரத்தில்
சில்லிடுகிறது உடல்.
ஒரு நீண்ட மெளனத்தின்
நடுவே இரவாக நீயும்
மழையாக நானும் அமர்ந்திருக்கிறோம்.
-நிலாரசிகன்.
18 comments:
நானும் இன்று முதல் இந்த நிலா ரசிகனின் ரசிகனாய்...
//ஒரு நீண்ட மெளனத்தின் நடுவே இரவாக நீயும்மழையாக நானும் அமர்ந்திருக்கிறோம்.//
Excellant Words.
Kavi arumai.
மழை இரவில் நனைந்தேன்....வாழ்த்துக்கள்.
அருமையான கற்பனை.
நன்றி வெறும்பய,கலாநேசன்,சே.குமார்,ம.சரவணன்,வழிப்போக்கன்.
Nice!
//ஒரு நீண்ட மெளனத்தின்
நடுவே இரவாக நீயும்
மழையாக நானும் அமர்ந்திருக்கிறோம்//
நல்லா இருக்குதுதங்க...
நண்பர் நிலாரசிகனுக்கு,
கவிதையின் முடிவு அழகாக உள்ளது, ஆனால் இடையில் வரும் அந்தக் குரூர விவரிப்புகள் எதற்காக?
புரிந்து கொள்வதற்காகவே கேட்கிறேன்.
ஒரு கவிதை இப்படித்தான் புரிந்து கொள்ளப்படவேண்டும் என இல்லை. வாசிப்பவனின் அனுபவம், உட்கிரகிப்புத் தன்மை பொறுத்துப் புரிந்து கொள்ளுதல் மாறலாம் என்பதும் ஒரு கவிஞராக நிச்சயம் நீங்கள் அறிந்ததே.
ஆனால், இந்த வகைக் கவிதையை உள்வாங்க எனக்கு மூச்சு வாங்குகிறது.
கொஞ்சமாய் விளக்க இயலுமா?
அட்வான்ஸ் நன்றிகள்!
மேலும்,
நாம் கடந்த சில மாதங்களுக்கு முன் "இண்டி பிளாக்கர்" சந்திப்பில் சந்தித்துக் கொண்டதும், உங்களைச் சந்தித்ததில் சிலாகித்து நான் என் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டதும் உங்களுக்கு நினைவுள்ளதா?
நன்றி அருணா,குருபரன்.
வருக கிரி,
உங்களை நன்றாக நினைவிருக்கிறது :)
//ஆனால் இடையில் வரும் அந்தக் குரூர விவரிப்புகள் எதற்காக?
புரிந்து கொள்வதற்காகவே கேட்கிறேன்.//
தேவையின்றி திணிக்கப்பட்ட விவரிப்புகள் அல்ல அவை. இரவின் கொடூரத்தை கடக்காத மனிதர்கள் உண்டா? அதற்காக இரவென்றால் கொடூரமானதா என்கிற விவாதத்திற்குள் நுழைய விரும்பவில்லை. இரவின் கரங்களில் சிக்குண்ட ஜீவனின் விவரிப்புகளே அவ்வரிகள்.
நன்றி.
//புலன்கள் ஒடுங்கிய அறைக்குள்
........
........
மழையின் ஈரத்தில்
சில்லிடுகிறது உடல்//
மிகவும் பிடித்தது நிலா.
அன்புள்ள நிலாரசிகனுக்கு,
துவக்கத்தில் இருந்தே தங்களது படைப்புகளை படித்து வருகிறேன்..
தங்களது கவிதைகளில் மென்மையான விஷயங்கள் தான் அழகு சேர்த்து கொண்டிருந்தது..
சமீப காலமாக தங்கள் கவிதைகளில் இருளான பக்கங்களை பற்றிய வர்ணனை அதிகமா இருக்கிறது.
ஆனாலும் கவிதைகள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்
ஓஹ்ஹோ!
மதியம் வாசித்ததைக் காட்டிலும், இப்போதல்லவா இக்கவிதையின் உண்மை முகம் புலப்படுகிறது எனக்கு!
தெளிவான ஆரம்பம், தீர்மானத்துடன் கூடிய வர்ணனைகள், இறுதியாகச் சொல்ல வந்ததைச் சொல்தல்.
அட்டகாசம் தலைவா!
சாக்லெட்..
விடியலை நோக்கித்தான் பயணப்படுகிறேன்.வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி.
நன்றி கீதா.
ஒரு நீண்ட மெளனத்தின் நடுவே இரவாக நீயும்மழையாக நானும் அமர்ந்திருக்கிறோம்.
அருமை
ஒரு நீண்ட மெளனத்தின்
நடுவே இரவாக நீயும்
மழையாக நானும் அமர்ந்திருக்கிறோம்
அழமான வரிகள்
Post a Comment