1.
காயத்தின் ஆழத்தில்
ஒரு முகம் மிதந்து கொண்டிருக்கிறது.
புரிதலின் பிழையால் பிரிந்த
இருநிழல்களின் சாயலுடன்
சலனமின்றி மிதக்கிறது அம்முகம்.
அன்பின் கதவுகள் நிரந்தரமாய்
மூடப்படுகின்றன.
எதிர்பார்ப்புகளற்ற இறைக்குள்
நுழைந்து மெளனிக்கிறது மனம்.
வழிந்தோடிய
கண்ணீர்த்தடத்தில் புதைக்கப்படுகின்றன
கவிதைகளின் ஊமைக்காயங்கள்.
2.
ஒரு
வனத்தினூடாக
துவங்கியது நம் பயணம்.
விழி இழந்தவனின்
கைகள் பற்றி அழைத்துச் சென்றாய்.
வார்த்தைகளில் ஒளியை
உணர்த்தி மகிழ்ந்தாய்.
ஓர் உன்னதமான அரவணைப்பை
பரிசளித்தாய்.
வனம் முடிந்து வெளியேறுகையில்
ஒளி கொண்ட மழையாகியிருந்தேன்.
பட்டாம்பூச்சிகளால் போர்த்தப்பட்டு
பறந்து சென்றாய்
நீ.
3.
அனைத்திற்குமான முடிவுகளை
உன்னிடம் யாசிக்க வேண்டியதாய் இருக்கிறது.
அனைத்திற்குமான விடியலை
இருளிடம் யாசிப்பதை போல்.
-நிலாரசிகன்
18 comments:
//வழிந்தோடிய
கண்ணீர்த்தடத்தில் புதைக்கப்படுகின்றன
கவிதைகளின் ஊமைக்காயங்கள்.//
ரசித்தேன்...
முதல் கவிதை வழமை போலவே உன் கவிதை...இரண்டாவது கவிதையும் மூன்றாவதும் அற்புதம் நிலா...தலைப்பும் கவிதை.
உங்களின் மற்ற கவிதைகளை போலவே இதுவும் அருமை.
கவிதை அருமை
/ வழிந்தோடிய
கண்ணீர்த்தடத்தில் புதைக்கப்படுகின்றன
கவிதைகளின் ஊமைக்காயங்கள். /
அருமை....
/பட்டாம்பூச்சிகளால் போர்த்தப்பட்டு
பறந்து சென்றாய்
நீ./
ஏன் பிரிச்சுட்டீங்க ?
முன்றாவது அழகு...
நன்றி அண்ணே...
//வழிந்தோடிய
கண்ணீர்த்தடத்தில் புதைக்கப்படுகின்றன
கவிதைகளின் ஊமைக்காயங்கள்.//
மிகவும் அருமை!
ரசித்தேன்...
மூன்றாவது நன்றாக இருக்கிறது. அன்பு செய்யும் போது எந்த விஷயத்தையும் இருவரை மனதில் வைத்து முடிவு எடுக்க வேண்டி இருக்கிறது.
கவிதை மிகவும் அருமை...
தலைப்பும் அருமை...
//அனைத்திற்குமான முடிவுகளை
உன்னிடம் யாசிக்க வேண்டியதாய் இருக்கிறது.
அனைத்திற்குமான விடியலை
இருளிடம் யாசிப்பதை போல்//
அருமை.
//வார்த்தைகளில் ஒளியை
உணர்த்தி மகிழ்ந்தாய்.//
அவள் அவனுக்கு வார்த்தையின் எனும் ஒலியின் வழியே ஒளியை உணர்த்தினாள்...
நீங்கள் எங்களுக்கு அதனை அழகிய வரியின் வழியே காட்டிக்கொண்டு...
வாழ்த்துகள்...
கவிதைகள் நன்று,
கவிதையின் தலைப்பு நல்லா இருக்கு நிலா...
ஆனால் ஏன் இன்னும் சோகம்?
நன்றாக இருக்கிறது நிலாரசிகன்...
//அனைத்திற்குமான முடிவுகளை
உன்னிடம் யாசிக்க வேண்டியதாய் இருக்கிறது.
அனைத்திற்குமான விடியலை
இருளிடம் யாசிப்பதை போல்.//
என்னை கவர்ந்தன இந்த வரிகள்...
வாசித்து நேசித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..
//அனைத்திற்குமான முடிவுகளை
உன்னிடம் யாசிக்க வேண்டியதாய் இருக்கிறது.
அனைத்திற்குமான விடியலை
இருளிடம் யாசிப்பதை போல்.//
ITHU REMBA PIDICHCHIRUKKU
[APPO........AVALAI IRUL NU SOLLA VARREENGALAA??......:) ...]
VAAZHTHUKKAL NILA........
"முன்னொரு காலத்தில் மழை பொழிந்துகொண்டிருந்தது"
IPPOTHUM NINAITHTHUKONDE IRUKKIRATHU.....
PADAM SUPERB.....!
நல்ல கற்பனை வளம்...ரசித்தேன்....
நான் உங்களுடைய கவிதைகளின் ரசிகன் மிகவும் அருமை நன்றி...
Post a Comment