முடிவற்று நீளும் இரவுகளிலும்
நின்று கொண்டே உறங்கும் புரவிகளின்
நிழல்களில் ஊர்ந்து செல்லும் எறும்புத்தடத்திலும்
தியானப்பெருவெளியின் வறண்ட நதியோரத்தில்
தலை குனிந்து மரணத்தின் முதல் படியில்
நிற்கும் ஒற்றை பூச்செடியிலும்
இன்னும்
அறியப்படாத வண்ணத்துப்பூச்சிகளின்
சிறகு வர்ணத்திலும்
உரையாடும் இலைகள் கொண்ட
வனமொன்றின் நடுவிலும்
இருண்ட கனவுகளில் கரையும்
சிவப்பு நிற மெழுகின் பாதங்களிலும்
தேடி
தேடி
களைத்து
இக்கவிதையில் வீழ்ந்தேன்.
ஒரு ரயில் நிலைய சந்திப்பில்
ஆயிரம் யுகங்களுக்கும் மீள இயலாமல்
என்னைக் களவாடி ஓடி மறைந்த
இரண்டாம் மாதத்தின்
பதினான்காம் நாளை.
-நிலாரசிகன்.
11 comments:
ஆயிரம் யுகங்களுக்கும் மீள இயலாமல்
என்னைக் களவாடி ஓடி மறைந்த...
மிக மிக அருமையான வரிகள்.. :)
ஆயிரம் யுகங்களுக்கும் மீள இயலாமல்
என்னைக் களவாடி ஓடி மறைந்த....
மிக மிக அருமையான வரிகள்.. :)
கவிதையில் வீழ்ந்தவனைக் களவாடிய நாளின்..
கவிதை
மிக அருமை:)!
அருமையான வரிகள்.
மிக அருமை
அருமை
அதீதமான சுவை...!
எங்கிருந்து ஒய் பிடிக்கிறீர் வார்த்தைகளை...!
உம் சொற்சுவையை என் ஒவ்வொரு திசுவும் சுவைக்கிறது..!
எனக்கு இந்த கவிதை...அப்புறம் அந்த மாடர்ன் ஆர்ட் ஓவியம் எல்லாமே ரொம்ப பிடிச்சது...something different..
பூங்கொத்து!
அருமை.
nallaayirukku....
Post a Comment