கனமான நூலொன்றின் நானூற்றி இருபதாவது
பக்கத்தில்தான் முதலில் அவனை சந்தித்தேன்
சொற்கூட்டங்களில் பின்னிருந்து வெளிக்குதிக்க
கடும் முயற்சிகளிலிருந்தான்.
ஒவ்வொரு சொல்லாக அகற்றி விடுவித்தேன்.
தூர தேசமொன்றிலிருந்து புத்தகங்கள் வழியே
அவன் இந்நூலிற்குள் கடத்தப்பட்ட செய்தியை
வருத்தங்களுடன் பகிர்ந்தவனுக்கு தேநீர் கொடுத்தேன்.
மீண்டும் தன் தேசம் திரும்பும் வழியை
ஏழு முறை கேட்டுச் சலித்தான்.
ஒரே ஒரு வழி இதுவென்று
என் கவிதையொன்றில்
அடைத்துவைத்தேன்.
இக்கணம்.
-நிலாரசிகன்.
8 comments:
ரசித்தேன்:)! மிக அருமை.
நன்றி அம்மா :)
அருமை! கவிதை மனதில் நிற்கும்.
உங்கள் எழுத்து பிரமிப்பைத் தருகிறது, நிலா. வாழ்க!
கவிதை ரசித்தேன் :) மிக அருமை.
:-)
rasithu padithen nanbare....
super super
Post a Comment