Sunday, March 11, 2012

முத்தக்கொலையாளினி


அனைவரும் உறங்க சென்றபின்
உனதறைக்கு திரும்புகிறாய்.
அறையெங்கும் மிதந்தலையும்
செந்நிற முத்தங்களை கண்டு
ஸ்தம்பித்து நிற்கிறாய்.
ஒவ்வொரு முத்தத்திற்குள்ளும்
கண்களில் நீர் தளும்ப
ஒருவன் அமர்ந்திருக்கிறான்.
எவ்வித உணர்வுகளுமின்றி
ஒவ்வொரு முத்தமாய் உன் நீள்நகத்தில்
குத்தியெடுத்து யன்னல் வழியே வீசுகிறாய்.
யன்னலுக்கு வெளியே ஓடும்
சிற்றோடையில் செத்து மிதக்கின்றன
உயிரற்ற வெற்று முத்தங்கள்.
விடியலில்
வற்றிய சிற்றோடையின் தடமெங்கும்
மரித்துக்கிடந்தன ஆயிரமாயிரம்
சூரியன்கள்.

-நிலாரசிகன்.

[சென்ற வார கல்கியில் வெளியானது]

4 comments:

said...

thalaippe azhahaa irukku nila..

vaazhthukal.

said...

நன்றி இரசிகை. என்னுடைய கவிதைகளை facebookல் உடனுக்குடன் பார்க்கலாம்.நீங்கள் பேஸ்புக்கில் இருக்கிறீர்களா?

said...

அருமையான ரசனை.வாழ்த்துக்கள் சகோதரா.

said...

hii.. Nice Post