Wednesday, October 10, 2007

நிலாநேசம்




இரவின் வெளிச்சத்தை
ரசிக்க உன்னை
அழைக்கிறேன்.

இரவல் வெளிச்சமது
என்று விஞ்ஞானம்
பேசுகிறாய்.

ரசனைக்கும் நிதர்சனத்திற்கும்
இடையே பெருவெளியொன்று
உருவாகி மெளனமாய்
நம்மிடையே வந்தமர்கிறது.

மெளனம் கலைக்க
போராடி தோற்கிறேன்
எதிர்பார்ப்புகளற்ற பார்வையொன்றை
பரிசாகத் தருகிறாய்

நமக்கு தூதாக இயலாமல்
போனதற்காக வருந்தி
கரையத் துவங்குகிறது
நிலா.

4 comments:

said...

இந்த‌ க‌விதையில் ஒவ்வொரு வார்த்தைகளையும் உணர்ந்து படித்தேன்.
குறிப்பாக‌ சொல்ல வேண்டுமென்றால்,

//எதிர்பார்ப்புகளற்ற பார்வையொன்றை
பரிசாகத் தருகிறாய்//

இந்த வரிகளில் நான் தொலைந்தே போனேன்.கடைசி வரி அற்புதம்.

- ச‌காரா.

Anonymous said...

"mounam kalaikka poradi thorkkirane"
yenru thodangum antha 4 varigalil yenathu 40 nimidangalai tholaithirunthane..azhagana padaippu !..
snegamudan,
nirandhari..

said...

இந்த கவிதையின் ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது..வரப்போகும் வரிகளின் ஆழடத்தையும் உணர்த்தி விடுகிறது..மிகவும் ரசித்து படித்த வரிகள் :
//இரவின் வெளிச்சத்தை
ரசிக்க உன்னை
அழைக்கிறேன்.

இரவல் வெளிச்சமது
என்று விஞ்ஞானம்
பேசுகிறாய்.

ரசனைக்கும் நிதர்சனத்திற்கும்
இடையே பெருவெளியொன்று
உருவாகி மெளனமாய்
நம்மிடையே வந்தமர்கிறது

மெளனம் கலைக்க
போராடி தோற்கிறேன்
எதிர்பார்ப்புகளற்ற பார்வையொன்றை
பரிசாகத் தருகிறாய்

நமக்கு தூதாக இயலாமல்
போனதற்காக வருந்தி
கரையத் துவங்குகிறது
நிலா.

சிரிக்காதீங்க..எல்லா வரிகளும் பிடிச்சிருக்கு...என்ன செய்யட்டும்??

said...

arumai...