Friday, October 19, 2007

உதிர்வதில்லை உதிரப்பூ




மெதுவாய் மிக மெதுவாய்
அங்கும் இங்குமாய்
அசைந்தபடி காற்றில் மிதந்து
பூமி நோக்கி வருகிறது காய்ந்த
பூவொன்று....

புழுதிக்காற்று வந்து வாசமென்னும்
கற்பை பறித்தது எண்ணி
வீழ்கிறதா இந்தப் பூ?

மகரந்தம் முழுவதையும்
கந்தகம் மறைத்துக்கொண்ட
சோகம் எண்ணி
வீழ்கிறதா இந்தப் பூ?

மரணத்தை அழைப்பிதழாக
அனுப்பிய இந்த பூமியை
பழித்துக்கொண்டே
வீழ்கிறதா இந்தப் பூ?

விழுந்தாலும் புன்னகை
செய்துகொண்டே வீழ்கின்ற
பூ சொல்லிற்று உலகிற்கு
ஓர் நற்செய்தி..
விழுவது நானாகிலும்
எழுவது ஈழமென்று!

5 comments:

said...

அருமை ! ரசித்தேன் :)

said...

"ஓர் நற்செய்தி..
விழுவது நானாகிலும்
எழுவது ஈழமென்று"

அருமை...

Anonymous said...

"magarantham muzhuvathaiyum ganthagam maraithukkonda sogam yenni veezhgiratha intha poo?" intha varigal arumai..intha poovin veezhchi,manithanin veezhchikku muthal padi yenrae nan yennugirane..(iyarkkai annaiyai naam azhithukkondu iruppathai solgirane)
snegamudan nirandhari.

said...

//விழுந்தாலும் புன்னகை
செய்துகொண்டே..//

மூன்றே வார்த்தைக‌ள் தான். அட‌ங்கியிருக்கும் அர்த்த‌ங்க‌ள் ஆயிர‌ம்.

//விழுவது நானாகிலும்
எழுவது ஈழமென்று!//

ந‌ச் வ‌ரிக‌ள்.

- ச‌காரா.

said...

நான் சொல்ல‌ணும் நினைத்த‌தை ம‌த்த‌வ‌ங்க‌ சொல்லி இருந்தாலும் ஈழ‌த்தின் அவ‌ல‌த்தை பெரிதும் எடுத்துக் கூறியுள்ள‌ இந்த‌ வ‌ரிக‌ளையே பெரிதும் உண‌ர்கிறேன், ம‌திக்கிறேன்..
// புழுதிக்காற்று வந்து வாசமென்னும்
கற்பை பறித்தது எண்ணி
வீழ்கிறதா இந்தப் பூ?

மகரந்தம் முழுவதையும்
கந்தகம் மறைத்துக்கொண்ட
சோகம் எண்ணி
வீழ்கிறதா இந்தப் பூ?
//
க‌விதையின் த‌லைப்பு மிக‌வும் உண‌ர்ச்சிப்பூர்வ‌மாக‌ அமைந்துள்ளது.