கனத்த மெளனம்
தேகமெங்கும் முட்களாய்
பரவி வெறுமை சூழ்ந்து
காற்றில்லாவெளியொன்று
உருவாகி வெளிச்சமற்ற புலத்தில்
எனை வீசிய பிரிவுப்பொழுதில்...
எவ்வித அதிர்வுகளுமின்றி
பிடித்தபாடலொன்றை முணுமுணுத்தபடி
போய்க்கொண்டிருக்கிறாய்
நீ.2.
உனக்கான கடைசி
கடிதத்தை நான்
எழுதிக்கொண்டிருக்கையில்
புரிந்துகொள்ளப்படாத எனதன்பில்
விழுந்திருந்த கீறல்
உடைந்திருக்ககூடும்.
அறியப்படாத பூவொன்றின்
வாசனையில் லயித்திருக்கும்
உனக்கென் பிணத்தின்
வாடை திடுக்கிடச்செய்யலாம்
அல்லது
கைதட்டவும் தோன்றலாம்.
எவ்வளவு முயன்றும்
நினைவில் மலராத
கனவென மரணிக்கின்றன
என் ப்ரியங்கள்.
13 comments:
Unadu kavithai en kangalai kalanga vaithu vittadu. Miga inimaiyaana kavithai Nanbanae!
///எவ்வித அதிர்வுகளுமின்றி
பிடித்தபாடலொன்றை முணுமுணுத்தபடி
போய்க்கொண்டிருக்கிறாய்
நீ.///
அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் ஆழமான வரிகளில்
Iru varigalil,
Idhaya valigalai solla,
Unaal matume mudikirathu Nanbane...
Paaratukal ungalukku...
Un sindhanaigal ennai veguvai kavarkinrathu .... vazhthukkal un panni thodarra
purinthukolapadatha enathanbil
vilunthiruntha keeral
udainthirukakkudum...
Intha varigalil irukerathu arumaiyana KATHAL.
//எவ்வித அதிர்வுகளுமின்றி
பிடித்தபாடலொன்றை முணுமுணுத்தபடி
போய்க்கொண்டிருக்கிறாய்
நீ.//
அதிர்வை தருகிறது..
Hello nanbane
Intha kavithaigalai vasikayil kalangiyathu en kangal alla en manathu. Kavithai varigalal en manathai kanlanga vaitha ungaluku en parattukal.
Natpudan
Soundari
அறியப்படாத பூவொன்றின்
வாசனையில் லயித்திருக்கும்
உனக்கென் பிணத்தின்
வாடை திடுக்கிடச்செய்யலாம்
அல்லது
கைதட்டவும் தோன்றலாம்.
very nice wording
ur
sakthi..
hai..your poem reali nice..
i do write in tamil..but i dont know how to convert the font in tamil when use in unicode format..
i had try..if you want read my poem in tamil..please visit this link:- www.flickr.com/photos/vinoshna
thanks.im just a beginner.
en kavithai unge kavithaiku edagathu, nila rasigare..
so,i hope you can give me some guideline.take care
Mounathai vida peria ayutham veru enna irukka mudiyum. Kavithai nandraga irukirathu.
உறைய செய்தது
...
வார்த்தைகளிலிருக்கும் கூர்மையும் வலியும்.
மிக ஆழமான படைப்பு!
முன்பு போல்,
மலர் பொழியும்
மழை தூவும்
கவிதைகள் எழுதுங்கள் நிலாரசிகன்...
அழுவதற்கு தான் ஏற்கனவே ஆயிரம் காரணங்கள் இருக்கின்றனவே.
மகிழ்வதற்கு உங்கள் கவிதை ஒரு காரணமாக இருக்கட்டுமே.
மறுபடியும் கேட்கிறேன்,
முன்பு போல் எழுதுங்கள்.
நண்பா.....
உங்களின் வரிகளும்
வரிகளில் உள்ளள வலிகளும்
என்னை பின்னோக்கி பயணிக்க செய்கின்றன...
//எவ்வளவு முயன்றும்
நினைவில் மலராத
கனவென மரணிக்கின்றன
என் ப்ரியங்கள்//
sabaash....nila!!
Post a Comment