Tuesday, July 28, 2009
ஒரு மெளனம் ஒரு மரணம்
பெயரிடப்படாத மெளனத்தின்
எல்லையில் அந்தக்
கண்கள் நிலைத்திருந்தன.
அடர்குளிரில் நடுங்கும்
ஊமைக்குருவிகளின் மொழி
அந்த விழிகளுக்கு மட்டுமே
புரிவதாய் இருந்தது.
யாருமற்ற
மூன்றாம் ஜாமத்தில்
அவ்விழிகள் சடலமாக மாறியிருந்தபோது
நிறமிழந்த
ஓராயிரம் சொற்கள்
நீண்ட வரிசையில் அதனை
மொய்க்கத்துவங்கின.
மெளனத்தின் மரணமும்
அநாதையாய் வீதியில் கிடந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
//பெயரிடப்படாத மௌனம், அடர்குளிர், ஊமைக்குருவி, மூன்றாம் ஜாமம், நிறமிழந்த
ஓராயிரம் சொற்கள்//
இந்த எல்லா உவமைகளுமே அழகு!
மௌனத்தின் மரணம் நல்ல விசயம் தானே நிலாரசிகன்
//பெயரிடப்படாத மெளனத்தின்
எல்லையில் அந்தக்
கண்கள் நிலைத்திருந்தன//
:)
//அடர்குளிரில் நடுங்கும்
ஊமைக்குருவிகளின் மொழி
அந்த விழிகளுக்கு மட்டுமே
புரிவதாய் இருந்தது.//
??
//யாருமற்ற
மூன்றாம் ஜாமத்தில்
அவ்விழிகள் சடலமாக மாறியிருந்தபோது//
!!
//நிறமிழந்த
ஓராயிரம் சொற்கள்
நீண்ட வரிசையில் அதனை
மொய்க்கத்துவங்கின//
:)..!!
//மெளனத்தின் மரணமும்
அநாதையாய் வீதியில் கிடந்தது//
muththaaippu!!
photo kalakkal...
niraya aazhama irunthathu...
adarththiyaavum irunthathu...
vazhththukkal nila:)
ஃபோட்டோவுடன் கவிதையின் மவுனத்தின் மூன்றாம் ஜாமத்தில் அங்(க்)யவிதத்தை சொன்ன வரிகள் அருமை
ஃபோட்டோவுடன் மூன்றாம் ஜாமத்தில் மவுனத்தை அடங்(க்)ய விதத்தை அழகான வரிகளில் ஜொலிக்கவிட்டிருக்கீங்க
கவிதை வரிகள் கற்பனை திரன்!
//யாருமற்ற
மூன்றாம் ஜாமத்தில்
அவ்விழிகள் சடலமாக மாறியிருந்தபோது
நிறமிழந்த
ஓராயிரம் சொற்கள்
நீண்ட வரிசையில் அதனை
மொய்க்கத்துவங்கின.//
Nalla Irukku NilaRaseegan...
Migavum Arputhamana Karpanai....
Varthaikalil Vilayadi Irukiga....
Very Nice....
Apram... Padamum Nala Iruku...
hai thola
oru oru nalum un eluthukkalai thedukirathu en nenjam innum niraya eluthunga.
anbudan,
nanthini
நினைவோட்டங்களை நிழல் போல் காட்டுகிறது இவ்வரிகள் .... அன்புடன் ராஜன் ராதாமணாளன்
மௌனம்,மூன்றாம் ஜாமம்,நிறமிழந்த
ஓராயிரம் சொற்கள் - evai aanaithum arumai....ore porul.....ஓராயிரம் unnarvugal...Nandri Nila
//மௌனத்தின் மரணம் நல்ல விசயம் தானே நிலாரசிகன்
//
ஆம் உயிரோடை. உங்களுக்கு தெரியாத
மெளனங்களா?
வாசித்து நேசித்த நெஞ்சங்களுக்கு என் நன்றிகள்.
Post a Comment