Sunday, August 02, 2009

நண்பர்கள்....நண்பர்கள்...நண்பர்கள்...



1
2
3
4
5
ஆறாப்பு வரையில்
ஒன்றாய் ஒண்ணுக்கு போய்
சிலேட்டு குச்சி விழுங்கி
ஓணான் அடித்து
பொன்வண்டு சேகரித்து
மூக்கொழுகி திரிந்த
நண்பர்களுக்கும்
7,8,9,10 வரை
"போப் நினைவு மேல்நிலைப்பள்ளியில்"
நகசதையாய் திரிந்து
மாங்காயும்,நெல்லிக்காயும் திருடி
"சில்க்" நூலில் பட்டம்விட்டு
ஸைன்ஸில் முட்டை எடுத்து
வாத்தியார் நாற்காலியில் முள்வைத்து
முட்டி கிழிய கபடி விளையாடிய
நண்பர்களுக்கும்

11 12ல்
முளைக்காத மீசையை முறுக்கி
பெண்கள் பள்ளி பேரழகிகளின்
கடைக்கண்ணில் கெமிஸ்ட்ரி
தேடியலைந்து
பிஸிக்ஸில் பெயிலாகி
திக்கிமுக்கி பள்ளி முடித்து
திசைக்கொன்றாய் சிதறியபின்னும்
வாழ்க்கையை எப்போதும்
அழகான நினைவுகளால்
நிரப்பி நெஞ்சோடு கலந்திருக்கும்
என் பால்ய
நண்பர்களுக்கு...


நண்பர்கள் தின வாழ்த்துகள்.

21 comments:

said...

உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்

Anonymous said...

நண்பர்களுக்கான கவிதை நினைவுகளை மீட்டெடுத்தது! மகிழ்வு!

said...

நண்பர்கள் தினத்தன்று...நண்பர்களை நினைவில் கொண்டு வரும் ஒரு கவிதை
...அற்புதமான கவிதை

Anonymous said...

உங்களுக்கும் எனது நண்பர்கள் தின வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

said...

அழகான வரிகளுடன் நட்பை புரட்டி எடுத்து மீண்டும் அந்த உலகத்திற்கு போகத்துடிக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

தொடரட்டும் என்றென்றும்...

Anonymous said...

thola

unkalukkum en nanbar thina valthukkal

nanthini

nanthini said...

thola

unkalukkaum en nanbarthina valththukkal
by nanthini

Anonymous said...

நண்பர்கள் தின வாழ்த்துகள்...

said...

Nalla kavithai.

Ungalukum Nanbarkal thina Valthukkal...

said...

அழகான கவிதை நிலா. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.::))

said...

Unngal Kavithai Yennai, Meedum Palliku Poogalam... Yean AlzaithuChentrathu...
Thanks for ur Kavithai so that i can recollect my most of the friends.

Ganapathi said...

Nanbargal thina valthukkal.....

said...

arumaiyaana kavithai. thodarnthu ezuthunggal.

said...

vaazthukal nilaa, enathu nanbargaaLai meendum ninaikkireen.

Unggalukkum enathu anaiththu nanbarkalukkum iniya wanbarkal thina vaalthugal.

latha

said...

arumaiyaana kaviyhai nilaa. en nanbargalai satru ninaithu paarkireen. nandri nilaa. iniya vaalthugal.

said...

Nanbarkal dhina Vazhthukkal...

said...

palyaththukku piraku ungalukku kidaiththa nanbarkalukkum vazhththu solli irukkalaame!!!

said...

//palyaththukku piraku ungalukku kidaiththa nanbarkalukkum vazhththu solli irukkalaame!!!//

தொடர்பற்றவர்களுக்கான கவிதையிது.
நன்றிகள் பல.

Kalaivani said...

ஹாய் நிலாரசிகன்....

நல்லா இருக்கு பால்ய காலத்து நட்பு கவிதை.....

said...

konjamum yethir paaraatha surerb pathil......

athai mention seithirunthaal ketkira velai michcham aahi irukkum:)

niraiya vazhththukal nila:)

said...

பால் வழியுது...பால்ய நண்பர்களுக்கான கவிதையில்...?!