Monday, August 03, 2009
அவளது கடவுளர்கள்
மனதை வெல்வதான
அவளது வேஷத்தில்
இறந்துகிடக்கின்றன சில
ரோஜாக்கள்..
வேரில் மலர்ந்த மோகத்தீயில்
பிணக்குவியலானது
நிசப்தம் நிறைந்த பழைய
சொற்கள்..
பகிரத்தெரியாத நேசத்தின்
எல்லையில்
அவனது இருத்தல்
புள்ளியென மறைந்தழிந்தபோது
பழிவாங்குதலில் வென்றுவிட்டதாய்
இழிபுன்னகையில் ஒளிர்கின்றனர்
அவளது
கடவுளர்களும் கந்தர்வர்களும்.
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
மிக அருமையா வந்திருக்கு. கலக்கல்.
//இறந்துகிடக்கின்றன சில
ரோஜாக்கள்..//
ரோஜாவிற்கென்று சில குணங்கள் உண்டு. ரோஜாவிற்கு இறப்பே கிடையாது. காய்ந்தாலும் மணக்கும் ஒரே மலர் ரோஜா மட்டுமே. அப்படிப்பட்ட ரோஜாவைக்கூட பிரிவின் சோகத்திற்கு காட்டி இருக்கும் முரண் அழகு.
//நிசப்தம் நிறைந்த பழைய
சொற்கள்..//
இங்கேயும் அதே முரண். நிசப்தம் என்பதில் இருக்கும் சப்தம்... பழைய சொற்களை நினைவுகூரும் நினைவை அழகான சொல்லி இருக்கின்றீர்கள்.
//அவனது இருத்தல்
புள்ளியென மறைந்தழிந்தபோது//
இருத்தாலில் நீட்சி என்பேன். இது ஒரு காட்சிப்பிழை தான் நண்பா. உனது இருத்தல் இருக்கும் இடத்தில் இருந்தபடியே இருக்கும் தொலைவில் போனவர் பற்றி கவலை கொள்ள வேண்டாம்.
//பழிவாங்குதலில் வென்றுவிட்டதாய்
இழிபுன்னகையில் ஒளிர்கின்றனர்
அவளது
கடவுளர்களும் கந்தவர்களும்.//
ஏன் இவ்வளவு வெறுப்பை பதிந்திருக்கின்றீர்கள். சிரிக்கும் கவிதைகளை விரைவில் எதிர்நோக்கி.
enna alakana varikal,
niraya per intha ulakil manathin unarvukai velvatharkuthan poradukirarkal.
anbudan,
nanthini
//பகிரத்தெரியாத நேசத்தின்
எல்லையில்
அவனது இருத்தல்
புள்ளியென மறைந்தழிந்தபோது
பழிவாங்குதலில் வென்றுவிட்டதாய்
இழிபுன்னகையில் ஒளிர்கின்றனர்
அவளது
கடவுளர்களும் கந்தவர்களும்//
அருமை.அருமை.
நம்ம சபைபக்கமும் வந்து கவிதை படிங்க.
http://rajasabai.blogspot.com
very nice :)
very nice :)
Superb!!!
மிக அழகான கவிதை
வாழ்த்துக்கள்
//பகிரத்தெரியாத நேசத்தின்
எல்லையில்
அவனது இருத்தல்//
அட!!!
பூங்கொத்துக்களுடன் விருதும் கொடுத்திருக்கேன் வாங்கிக்கோங்க!!
really wonderful kavidhai!!!!
சோக சொற்களில் ஒளிந்திருக்கிறது அழகான கவிதை.
Post a Comment