Tuesday, August 11, 2009

ஓர் இலை உதிரும் தருணத்தில் மழை பெய்துகொண்டிருக்கிறது



1.
பாசிகள் படர்ந்த குளக்கரையில்
மீனுடலை ருசித்துக்கொண்டிருக்கும்
காகங்களை வெறிக்கிறதுன் கண்கள்.
தளர்ந்த உனது கால் வழியே
ஊர்ந்துசெல்கின்றன எறும்புகள்.
நாய்கள் நிறைந்திருக்கும் அந்திம‌
காலத்தில் நீரூற்றிய
தொட்டிச்செடியில் வண்ணம்
உதிர்த்து பறக்கிறது பட்டாம்பூச்சி.
குழந்தையாதலின் சாத்தியங்கள் ஏதுமற்ற
இரவொன்றில் உனக்கொரு
உடைந்த பொம்மையை பரிசளித்து
சிரிக்கிறது காலம்.
மென்காற்றில் சிதறும் சாரலில்
நனைந்தபடி தனித்தழுகிறாய்
நீ.

2.
உலர்ந்த உன் இதழ்களின்
வெடிப்பில் நெடுங்கோடையின்
சாயல் ஒளிர்கிறது.
நீரில் மிதக்கும் கசங்கிய
காகிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது
உன் சரித்திரம்.
செவிக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டே
இருக்கின்றன மரணவண்டுகள்.
முற்றும் எழுதப்பட்டுவிட்டது
உன் வாழ்க்கை.
யாருமற்று/எதுவுமற்று விடிகின்ற
அதிகாலைகளிலும்
மழைப்பாடலுடன் துவங்குகிறது
உனது நாட்கள்.

3.
யாரோ ஒளிந்துகொண்டு உன்னையே
பார்ப்பதாக அடிக்கடி தோன்றுகிறது.
அதிர்வுகளால் நிரம்பி வழிகிறது
உன் தேநீர் கோப்பை.
இருளுக்குள்ளிருந்து எப்போதும்
கேட்கிறது ஏதோவொரு சப்தம்.
நீ நகர்ந்த பின்னும்
பிம்பங்களை காண்பிக்கிறது
கண்ணாடி.
மின்விசிறி அல்லது கூரை
இரண்டிலொன்று உன் சிரத்தை
விரட்டுகிறது.
கொக்குகளும் குருவிகளும்
உன் தலைமீதே எச்சமிட்டு
பறக்கின்றன
மழை கண்டால் மட்டும்
சிலிர்க்கிறது உன்னுடல்.
இனி,
நிம்மதியாய் சாகலாம்
நீ.

-நிலாரசிகன்.

16 comments:

nanthini said...

hai nila
eppavum sokangalai ean sonthamakki kolkirai

Meenadasan said...

Hi nila,

Romba sogama irukkku. Ganama irukku manasu paditha udan.. Arumaiyana Velipaadu.

said...

//குழைந்தையாதலின் சாத்தியங்கள் ஏதுமற்ற
இரவொன்றில் உனக்கொரு
உடைந்த பொம்மையை பரிசளித்து
சிரிக்கிறது காலம்.//

//யாருமற்று/எதுவுமற்று விடிகின்ற
அதிகாலைகளிலும்
மழைப்பாடலுடன் துவங்குகிறது
உனது நாட்கள்.//

//இனி,
நிம்மதியாய் சாகலாம்
நீ.//


அருமையான கவிதைகள்.. நவீனத்துவத்தின் நவீன பின்னல். வாழ்த்துக்கள் நிலா :-)

said...

அப்படியே மடிப்பு மடிப்பாக காட்சிகள் ஓடுகின்றன கவிதையைப் படிக்கும்போதே! கவிதை நல்லாயிருக்குங்க.

said...

வண்ணம் உதிர்த்து பறக்கும் பட்டாம்பூச்சி கவிதைகள். மனசுக்குள் வண்ணம் ஒட்டிக்​கொண்டாற் ​போன்ற உணர்வு!

said...

vaasikkum pothu yethaiyethaiyo purinthukonda manam kadaisiyil yethuvum illa verumaiyaiye ulvaangik kolkirathu........

vaarththaikalaik kaiyaanda vitham azhagu...

vazhththukkal nila!!

said...

நந்தினி,

//eppavum sokangalai ean sonthamakki kolkirai//

சோகங்களை சொந்தமாக்கி கொள்ளவில்லை,மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் ஒரு கிழவனின் பார்வையில் எழுதப்பட்ட கவிதையது.கவிதைக்கும் கவிஞனுக்கும் முடிச்சு போடாதீர்கள்.ஒரு கவிதை எழுதி முடிக்கப்பட்டவுடன் எழுதியவனும் வாசகனாகிவிடுகிறான்.

@செளமியா,
@சுந்தர்ஜி,
@ஜெகநாதன்,
@இரசிகை

நன்றிகள் பல. :)

said...

Nalla irukku friend :)

said...

அருமை நிலா ... இந்தக் கவிதை என்னை மிகவும் கவர்கிறது ...

said...

மூன்று கவிதைகளுமே ரொம்ப நல்லா இருக்கு நிலா. கவித்துவக் காட்சிகள் கண்ணில் நிழலாடுகிறது.

said...

நிலா, அனைத்தும் அருமை.

முதலாவது சூப்பர்.

said...

நன்றி அ.கா,நந்தா,யாத்ரா,சூர்யா :)

said...

கவிதை அழுத்துகிறது. முன் முடிவுகள் இல்லாமல் இளமையாக முடியட்டும் நம் காலங்கள்.

said...

nice :)

said...

நன்றி ஜெசீலா,நளன் :)

said...

Ungal Kavithaigal super..... Anal eppodhum sogam sogam.... Santhoshamaga iruppadhu pol, kavithaigal eluthalame.... Nila kalangal, Mayilaragai oru kadhal pola.....