Monday, August 24, 2009

என் தேசமெங்கும் வழிந்தோடும் நின் ஞாபகங்கள்





1.

நெருங்கி வா
அல்லது
ஒதுங்கி செல்
வெறும்காற்று நிரம்பிய
இடைவெளிக்குள்
நம் காதலை நிரப்பாதே!

2.

சப்தங்கள் தொலைந்த
ஓர் இரவில்
முத்தங்களால் என்னுயிர்
நிரப்பினாய்.
இப்போது,
அனல் நிரம்பிய அதிகாலைகள்
உயிர்வாங்குகின்றன
உன்
ஞாபக முத்தங்களால்!

3.

கடற்கரை மணலெங்கும்
விரவிக்கிடக்கும்
கால்தட கிறுக்கல்களில்
இன்னமும்
ஓடிப்பிடித்து விளையாடுகின்றன
சில்லுகளாய் உடைந்த
நம் காதலின் மிச்சங்கள்.

4.
மனதெங்கும் நுழைந்துவிட்டபின்
புணர்வது ஒன்றும்
பாவமில்லை என்றவள்
நீ.
வெந்நீர்பொழுதொன்றில்
என் நிழலையும்
நிராகரித்துச் சென்றவளும்
நீ.
உயிருள்ள பொம்மைகளானோம்
நானும் என் காதலும்.

5.
நடைபாதை செடியில்
எவ்வித குற்றவுணர்வுமின்றி
இலைகளை கிள்ளி எறியும்
மனிதர்கள் நிறைந்த
இப்புவியில்
தவறுதலாய் பிறந்துவிட்டோம்
நீ
நான்
நம் காதல்.

-நிலாரசிகன்.

23 comments:

said...

1, 5

இந்த ரெண்டு கவிதைகளும் ரொம்பப் பிடிச்சுருக்குது. அசத்தல் நிலாரசிகன்!

said...

எல்லாமே அருமை.

ஒரு எழுத்தை மாத்த சொல்லணும்னு வந்தேன். அதை மாத்திட்டதால சொல்றதுக்கு வேறெதுவும் இல்லை. :)

said...

கவிதைகள் அருமை..

said...

அனைத்து கவிதைகளும் அருமை..

//தவறுதலாய் பிறந்துவிட்டோம்
நீ
நான்
நம் காதல்.//

//ஓடிப்பிடித்து விளையாடுகின்றன
சில்லுகளாய் உடைந்த
நம் காதலின் மிச்சங்கள்//

மிகவும் பிடித்த வரிகள்

Kalaivani said...

Hi NilaRaseegan...

"என் தேசமெங்கும் வழிந்தோடும் நின் ஞாபகங்கள்"

thalaipae romba azhaga irukku nilaraseegan....

kavithai romba suberb......
entha varigal pidikkuthunu thaniya solla mudiyala....
yenna ovuovuru variyumae miga arputham.....

really very nice....

nandri.

said...

why always failures Nila....but wonderful kavithaikal....

NANTHINI said...

Hyyo ARPUTHAM NILA I LIKE THIS ALL VERY MUCH

Karkuzhali said...

"என் தேசமெங்கும் வழிந்தோடும் நின் ஞாபகங்கள்"

Wow!!! Etharthamum Unmaiyum Kalantha Kavithai.

said...

Title is superub.

Poem is very very superub.

Kavithiku oru Barathi

Kathal Kavithiku oru nila raseegan.

Please write poems like Barathi.

Poem is always not a love only.

Expecting from you Nila. Hope you will do it.

Hari

said...

ஐந்தாவது கவிதை அருமை நிலா...மற்ற கவிதைகளும்..

said...

5 migavum aazha padinthathu

said...

aththanaiyum kaathal.......

vazhththukal nila..:)

said...

Thanks for the wishes friends :)

said...

"நெருங்கி வா
அல்லது
ஒதுங்கி செல்
வெறும்காற்று நிரம்பிய
இடைவெளிக்குள் நம்
காதலை நிரப்பாதே..."

ரொம்பப் பிடிச்சுருக்குது அருமை நிலாரசிகன்!

Sundar.M said...

illayavan naan enna solla..

Un kavidhaiye un uyarvukku saandru..
kaadhalaiyum sogathaiyum nee solliya azhavukku engal kadhal kooda sonnadhilai.

Tamilaal unaku perumaiyaa illa unnal tamiluku perumaiyaa ariyen..

Nandri nila

Anonymous said...

All are very Nice and meaningful. I like all your's.

said...

நடைபாதை செடியில்
எவ்வித குற்றவுணர்வுமின்றி
இலைகளை கிள்ளி எறியும்
மனிதர்கள் நிறைந்த
இப்புவியில்
தவறுதலாய் பிறந்துவிட்டோம்
நீ
நான்
நம் காதல்.

Superbbbbbbbbbbbbb...... Excellent.... Again i am see you with love poems... but konjam santhosham irupadhu polavum eluthalame???!!! :-)

Anonymous said...

Read your soulful verses
many moons ago
Dont recall how many
it seems a while ago
It rained outside
and inside me - some
As I drowned in your lines

said...

என் கண்களில் நீர் வரவைதுவிட்டாய் நிலவின் ரசீகனே !!!!!!!!!!!!!!!!

said...

எப்படி பிரிக்க முடியும் ?

நீ

நான்

நம் காதல் !!!!!!!!!!!!

said...

Nila

Romba nala eruku entha kavithaigal
ovoru kavithayum arumai

rajee said...

"உயிருள்ள பொம்மைகளானோம்
நானும் என் காதலும்"

Tamil kulanthai said...

நடைபாதை செடியில்
எவ்வித குற்றவுணர்வுமின்றி
இலைகளை கிள்ளி எறியும்
மனிதர்கள் நிறைந்த
இப்புவியில்
தவறுதலாய் பிறந்துவிட்டோம்
நீ
நான்
நம் காதல்.

Arumai!!!