Friday, January 01, 2010
நின்னைச் சில வரங்கள் கேட்பேன்
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் -
அவைநேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -
இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதுங் கவலையறச் செய்து -
மதிதன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
-மகாகவிஞன்.
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
மிக்க நன்றி! நல்லதோர் நாளில் மகாகவிஞனை நினைவூட்டியதற்கு. புத்தாண்டு எல்லா வரங்களையும் வழங்கும் ஆண்டாக அமையட்டும்.
வலையுலகப்படைப்பாளிகள்—புத்தாண்டு தினமணி கட்டுரை
http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_31.html
வரங்கள் நிறைவேறும்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !
இந்த ஆண்டும் வளம் பல கிட்டட்டும்!
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். நினைத்தது நினைவேறட்டும்.
பொட்டு இடாத பாரதியாக இருந்திருந்தால் மனம் மகிழ்வுற்றிருக்கும்.
சாதி, மதம் போன்ற இழிவானவைகளுக்கு அப்பாற்பட்டவர்.
இது குறித்து ஏற்கனவே திரு. ஞானி என்னிடம் வருத்தம் தெரிவித்திருந்தார்.
//பொட்டு இடாத பாரதியாக இருந்திருந்தால் மனம் மகிழ்வுற்றிருக்கும்.
சாதி, மதம் போன்ற இழிவானவைகளுக்கு அப்பாற்பட்டவர்.
இது குறித்து ஏற்கனவே திரு. ஞானி என்னிடம் வருத்தம் தெரிவித்திருந்தார்.//
அதை பொட்டாக நான் எண்ணவில்லை. "சுடர்மிகும் அறிவின்" பிறப்பிடமாக எண்ணுகிறேன்.
varangal kidaikka vaazhththukal...:)
enakkum vendiyathu ithuthaan
Post a Comment