Monday, January 11, 2010

வெற்றிவேலுக்கு...

தெருவெங்கும் சிதறிய
செந்நீரின் கறை
உங்கள் "கறை" வேட்டியில்
பட்டுவிடாமல் ஒதுங்கி நின்றீர்கள்.
காரிலிருந்து இறங்கி
மிகுந்த அக்கறையுடன்
ஆம்புலன்ஸுக்கு காத்திருந்தீர்கள்.
கதறிய காவலன்
எந்த நிலையத்தை சேர்ந்தவனென்று
பட்டிமன்றம் ஆரம்பித்தீர்கள்.
மானம் கெட்ட உங்களிடம்
மனிதாபிமானம் எதிர்பார்த்தது
தவறென்று நிரூபித்தீர்கள்.
தமிழினம் அழிக்கப்பட்டபோது
ரசித்தது போலவே
வெற்றிவேலையும் ரசித்தீர்கள்.
இந்தக் கவிதைக்கு
கருவாகி தமிழின் மேல்
எச்சில் உமிழ்ந்து போனீர்கள்
மனித உருவில் திரியும் சாத்தான்களே!

-நிலாரசிகன்.

10 comments:

said...

Arputhamana kavidhai ezudha pala karu irundhum..karuvaagiya vetrivelukku manamaarndha anjali. Nilaraseegan avargalae idhi vida oru arumayana samarpanam veru illai. Varuthangaludan....

said...

//மனித உருவில் திரியும் சாத்தான்களே!//

மிகவும் சரி...

http://www.youtube.com/watch?v=Krtq6zwnmTI&feature=player_embedded

said...

the poem is a like a whiplash on the face of inhuman politicians!

said...

:((((

said...

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த கரை வேட்டி மனிதர்களை நினைத்தால்....
வழக்கம் போல வலைப்பதிவில் கவிதாஞ்சலி, கண்டனங்கள், அறிக்கைகள் இப்படி தொடரும் நமது எதிர்ப்புகள். சுகந்தி டீச்சர், முத்துக்குமார், கும்பகோண குழந்தைகள் என பலவற்றை மறந்த நாம் வெற்றிவேலை மட்டும் மறக்க மாட்டோமா என்ன?
எது எப்படியோ ஒரு கோழியோ, ஆடோ சாலையில் அடிபட்டால் அல்லது அடிபட்டு உயிருக்கு போராடினால் ஓடிவரும் ஆறரிவு மனிதர்கள் சக மனிதன் அடிபட்டால் மட்டும் உதவ மறுப்பது தான் மனிதநேயம் ( நமது அகராதியில் )
நட்புடன்,
சரவணன்.

said...

கோபம் அப்படியே வார்த்தைகளாய்...!

said...

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

said...

nice comment nilarasigan

if u done mine may i no more abt u sir
wats ur real name
actually wr r u
wat r u doing sir

said...

அவர்களுக்குப் பாரி வள்ளல் போன்றோரைப் பற்றி விளக்கி கூற யாருமில்லைப் போல. அஃறிணை உயிர்களிடத்திலும் அன்பு காட்ட வேண்டுமென வாழ்ந்தோரைப் பற்றி தெரிந்திருந்தால் நிச்சயம் அம்மதிரியான தப்புகள் நடக்க வாய்ப்பு இல்லை.

said...

vetrivel......yaar nu theriyaathu.

irunthaalum...,

:(