Friday, January 15, 2010

வெயிலாள்..




எப்போதும் வெயிலை சுமந்துகொண்டே
என்னிடம் வருகிறாய்
உன் மேல் படர்ந்திருக்கும் வெயில்

நீண்டு என்னுடலை தழுவ முயல்கிறது.
தொட நீண்ட
வெயிலின் கரங்கள் தடுமாற்றத்துடன்
சுருங்கிக் கொள்கிறது.
குளிர் நிறைந்த அவ்வெயிலின் கனம்
அதிகரித்தபோதும் உதறாமல் உன்னுடனே
வைத்திருக்கிறாய்.
பூவின் உருவிலிருந்து புழுவாகிறது
நம்மிடையேயான உறவு.

10 comments:

said...

konjam purintha maathiri irukkuthu.
puriyaatha maathiriyum irukku
super kavithai

said...

அடடா..என்னமா எழுதுறீங்க.உலகம் பூரா பொம்பளைப் புள்ளைக நம்பள டென்சன் பண்றதையும்,அதனால நாம அடையும் வேதனையும் அழகாச் சொல்லியிருக்கீங்க.
//குளிர் நிறைந்த அவ்வெயிலின் கனம்//
2 எல்லைகளையும் தொட்டிருக்கும் வரிகள்.நானெல்லாம் கடேசிவரைக்கும் படம் பாத்து கத சொல்ல வேண்டியது தான்.கவுஜ வரமாட்டேங்குது :(

said...

புரிந்தும் புரியாமலும்தான் நகர்ந்துகொண்டிருக்கிறது வாழ்க்கை :) :(

said...

அடடா..!

said...

மயில்ஜி,

நன்றி.

said...

மிகவும் பிடித்திருக்கிறது :)

said...

நன்றி குமார்

said...

நன்றி ப்ரியா.

said...

nice one.

said...

கவிதை அழகா இருக்கு. வெயிலை பெண்ணாக வடித்தது வித்தியாசம்