1.
அருவியில் தவறி விழுந்தவனை
பற்றிய அறிவிப்புகளில் உடன்
தேடுகிறோம் அவரவர் நண்பர்களை
யாருக்கும் எதுவும் ஆகிவிடவில்லை
பெரும் ஆசுவாசத்துடன்
உடல் உலர்த்த வெயில் நோக்கி
நகர்கிறோம்.
யாரோ ஒருவனின் மரணத்தை பற்றிய
குறிப்புகளற்று விழுந்துகொண்டிருக்கிறது
அருவி.
பாபநாசத்திற்கு போகலாம் என்கிறான்
சரியாக குளிக்காத நண்பனொருவன்.
2.
நிழலை எப்படி நீரில்
நனைப்பது?
உடலை துறப்பதை போல்
கடினமானதில்லை நிழலை
துறப்பது என்றபோதும்
நிழலை சுமந்துகொண்டே குளிக்கிறேன்.
இப்போது என்னுருவம்
மீனாக மாறியிருக்கிறது.
-நிலாரசிகன்.
12 comments:
கவிதை நன்றாகவுள்ளது நண்பரே.
இதே போன்ற ஒரு சம்பவம் எனக்கும் நிகழ்ந்து உள்ளது பான தீர்த்தம் சென்று குளிக்கலாம் என்று கிளம்பினோம் ஆனால் அங்கு சென்ற இரு புதியவர்கள் இறந்ததாக செய்தி வரவும் அகஸ்தியர் அருவியிலே குளித்து விட்டு திரும்பினோம்.... பாபநாசம் அருவிகள் பார்பதற்கு சாதுவாக இருக்கத்தான் செய்கிறது ஆனால் அங்கே நிகழும் விபத்துக்கள் கொடூரமானவை....
கவிதை கலக்கல்...
ரசித்தேன்
-ப்ரியமுடன்
சேரல்
நன்றி நண்பர்களே.
இரண்டு கவிதையும் மிக அருமை நிலா.
Migavum arumai....
நன்றி chandra & chandra
:)
அருவியைப் பற்றிய அருமையான வரிகள் நிலா.
romba superb...
m.....nallaayirukku.
Post a Comment