Saturday, July 17, 2010

சுயம் கவிதையென்று பொருள் கொள்க



1
உணர்ச்சிகள் உறைந்த பூச்செடியொன்று
உயிர்ப்பில்லாத வெண்ணிற
பூக்களுடன் நின்றாடுகிறது.
சாத்தான்களிடமும் வரம் பெற்றவன்
தேவதையின் முதல் சாபத்தை
பெறுகிறேன்.
விளக்கணைத்து அழுகின்ற
துயரத்தின் வலி நிலவு வரை
நீள்கிறது.
சன்னமான குரலில் என்னுடன்
உரையாட துவங்குகிறாள்
கவிதைப்பெண்.

2.
புறக்கணிப்பின் முட்பாதை
என்னை வந்தடைகிறது.
வழியெங்கும் மரித்து கிடக்கின்றன
சிறகிழந்த பட்டாம்பூச்சிகள்.
ஈர்ப்பின் அர்த்தம் அறியாத
பாதங்களில் மிதிபடுகின்றன
விருப்பங்கள் சில.
சுயத்தின் மரண ஊர்வலத்தில்
பூக்கள் தூவிச் செல்கிறாள்
சிறுமியொருத்தி.
சுயம் கவிதையென்று
பொருள் கொள்க.
3.
வாழ்வின் மிகப்பெரும்
தவறை ஒரு சொல்லாக்கினேன்.
எனது பிம்பத்தை தின்று
தீர்த்த அச்சொல் ஒரு வாக்கியமானது.
உடலெங்கும் படர்ந்த
அவ்வாக்கியம்
ஒரு பொய்யாக உருப்பெற்றது.
இப்போது,
பொய்யின் வடிவத்தாலான
கனவுச்சில்லுகளில்
எனக்கான கடைசி விருப்பங்களை
எழுதிக்கொண்டிருக்கிறேன்.
-நிலாரசிகன்.

15 comments:

said...

நானே முதல்வன் :)

said...

கவிதை அருமையா இருக்கு......வாழ்த்துகள்

said...

ரொம்ப நல்லாருக்கு நிலா

என்னை மிக ஈர்க்கின்றன வரிகள்... அருமை இருக்கு நிலா..

said...

ithu varai vaasikkatha yellaam vaasichchaachu..

yellaame pidichchirukku.

thaniththaniya comments seiya neram illai.

yellaaththukkullaiyume[kavithaikal]
oru verumai minjuva thontrukirathu..

vaazhthukal nila.....:)

said...

வாழ்த்துக்கு நன்றி மயில்ஜி,குரு,சிநேகிதி.

காணாமல் போன இரசிகைக்கு நல்வரவு :)

said...

அருமை இருக்கு நிலா.

said...

கவிதையாய் அனைத்தும் அருமை.

said...

நல்ல கவிதை

said...

m.........:)

soozhnilai matrum velai kaaranamaaha vara iyalavillai.

nantriyum anbum:)

said...

//வாழ்வின் மிகப்பெரும்தவறை ஒரு சொல்லாக்கினேன்.//
//விளக்கணைத்து அழுகின்ற துயரத்தின் வலி நிலவு வரைநீள்கிறது//
Awesome lines..!
வலியை வார்த்தைப்படுத்துவது அவ்வளவு சுலபமல்ல..
அது உங்களால் முடிகிறது. வாழ்த்துகள் நிலாரசிகன்..!!

said...

விளக்கணைத்து அழுகின்ற துயரத்தின் வலி நிலவு வரைநீள்கிறது. superb.. niga arumai!

said...

விளக்கணைத்து அழுகின்ற துயரத்தின் வலி நிலவு வரைநீள்கிறது. miga arumai!

said...

விளக்கணைத்து அழுகின்ற துயரத்தின் வலி நிலவு வரைநீள்கிறது. Nice

said...

நன்றி நண்பர்களே...

said...

புதைந்திருந்த சோகத்தை
கிளறி விட்டு வேடிக்கை பார்க்கிறது உங்கள் கவிதை...