பூட்டிய அறை யன்னலின் சிறுதுவாரம்
வழி உள் புகுந்தனர் ஆதிகள்.
மொத்தம் நாற்பத்தி நான்கு பேர்.
ஒவ்வொருவரின் கைகளிலும் ஆயுதமிருந்தது.
முதலாவதாக என்னுடலில்
தன் ஆயுதத்தை நுழைத்தவனின் பெயர்
சிலிர்ப்பூட்டியது.
வரிசையாக..
ஒவ்வொருவராக..
கடைசியாக
குருதி வெள்ளத்தில்
என்னை சிதைத்தவனின் பெயர்
ஆச்சர்யமூட்டியது.
வெளியேறினார்கள்.
அறையெங்கும் பெயர்களை விட்டுச்சென்றார்கள்.
முதலாவது ஆயுதத்தை செலுத்தியவன்
கைகளில்
போதி மரத்தின் ஒடிந்த கிளையும்,
கடைசி ஆயுதத்தால் சிதைத்தவன்
கைகளில்
கனமற்ற சிலுவையும் இருந்தன.
-நிலாரசிகன்
13 comments:
அற்புதம் நிலா
அற்புதம் நிலா
fantastic
கவிதை மிக அருமை... :)
கவிதை மிக அருமை... :)
ரொம்ப ரசித்தேன்.
Very nice
நன்றி நண்பர்களே :)
//போதி மரத்தின் ஒடிந்த கிளையும்,
கடைசி ஆயுதத்தால் சிதைத்தவன்
கைகளில்
கனமற்ற சிலுவையும் // hmmmm....good one..
அந்த ஆயுதங்கள் அருதெரியப்பட வேண்டும், அதனை அனுமதிபோரின் ஆட்சி கட்டிலே அவர்களுக்கு பாடையாக வேண்டும்... வரம் தருவாய் ஸ்ரீ நாராயணி நமோஸ்துதே...!
அந்த ஆயுதங்கள் அருதெரியப்பட வேண்டும், அதனை அனுமதிபோரின் ஆட்சி கட்டிலே அவர்களுக்கு பாடையாக வேண்டும்... வரம் தருவாய் ஸ்ரீ நாராயணி நமோஸ்துதே...!
//முதலாவது ஆயுதத்தை செலுத்தியவன்
கைகளில்
போதி மரத்தின் ஒடிந்த கிளையும்,
கடைசி ஆயுதத்தால் சிதைத்தவன்
கைகளில்
கனமற்ற சிலுவையும் இருந்தன.//
திகைப்பூட்டும் வரிகள். நன்று நிலா ரசிகன்.
:)
Post a Comment