1.
சாத்தானின் மொழி பேசுகிறேன்
ஒழுங்கின்மையில் தளும்பி
கூத்தாடுகிறேன்
திருடனை ஒத்திருக்கிறது என்
முகம்.
பித்தனாக அலைகிறதென் நிழல்
கோரத்தாண்டவமாடுகிற சொற்களை
உடைவாளாக கொண்டிருக்கிறேன்
தவிர்த்தலை மட்டுமே
விரும்புகிறேன்
காயங்களை அள்ளித்தந்து மகிழ்கிறேன்
உனது சித்தரிப்புகளில்
இப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
2.
முதல் சந்திப்பு
கற்பின் அர்த்தம்
முழுமை பெறாத முத்தம்
மறைக்கப்பட்ட சில நிஜங்கள்
கொஞ்சம் போலித்தனம்
பகிரப்படாத ப்ரியம்
இவை எதை பற்றியாவது
பேசுவோம் எப்போதும்.
சீ
தூ
கவிதையாவது மண்ணாங்கட்டியாவது.
3.
நம்பிக்கையில்லா
மனதின் சித்தரிப்புகளால்
நிகழ்கிறது
ஓர் உறவை தவற விடுதலுக்கான
சாத்தியங்கள்.
பறவையொன்றின் கூட்டை பிய்த்து
எறிகின்ற கொடூரத்திற்கு
சமமானவை இச்சித்தரிப்புகள்.
தவறேதும் செய்துவிடாமல்
திருட்டுப்பட்டம் சூட்டப்படுகின்ற
குழந்தைகளாக வீதியில்
கிடக்கின்றன
இருள் நிறைந்த ப்ரியங்கள்.
- நிலாரசிகன்.
14 comments:
நான் தான் முதல் வரவா?
முதல் கவிதை ஒரு குற்ற உணர்ச்சி மிகுந்த மனிதனை கண் முன் கொண்டு நிறுத்துகிறது.
பறவை கூட்டை பிய்த்து எறிவதா! கொடூரம்.
மனசுக்கு நன்றி. ஆம் நீங்கள்தான் முதல் வரவு. :)
கடந்த நான்கு ஆண்டுகளாக உங்களது கவிதையை தொடர்ந்து வாசித்து வரும் ரசிகை நான். முன்பை விட பலமடங்கு உங்களது மொழி வலுப்பெற்றிருக்கிறது நிலா. ஒவ்வொரு கவிதையிலும் சொல்லில் அடங்காத உணர்வு அடங்கி இருக்கிறது. எப்போதும் போல கலக்கல். நன்றி,விஜி
மூன்றும் நன்று, கடைசி மிகவும் பிடித்தது. முதல் கவிதை என் ’உறுபசி’யை ஞாபகப்படுத்தியது :)
முதல் கவிதையும்,கடைசி கவிதையும் ரொம்ப நல்லாயிருந்ததுங்க!
hmmmm...nadakattum
manitharkaluku inge panjamillai
anal manangaluku inge panjam
வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி.
அருமை.. : )
1,3 சிறப்பான கவிதைகள்.
இன்னும் கொஞ்சம் எளிமையாக இருந்தால் இன்னும் பலரையும் கவரும். இன்னும் கொஞ்சம் செறிவாக இருந்தால் பின்னவீனத்துவவாதிகளைக் கவரும். மத்தியமாக செல்கிறீர்கள். வாழ்த்துகள்.!
//இன்னும் கொஞ்சம் செறிவாக இருந்தால் பின்னவீனத்துவவாதிகளைக் கவரும். மத்தியமாக செல்கிறீர்கள். வாழ்த்துகள்.!//
நவீனத்துவமே போதும் :) நன்றி ஆதி.
சந்தோசம் நிலா.
2,3-m pidiththathu...
3-vathu valiyai yaerpadiththiduchu..
//
நம்பிக்கையில்லா
மனதின் சித்தரிப்புகளால்
நிகழ்கிறது
ஓர் உறவை தவற விடுதலுக்கான
சாத்தியங்கள்.
//
yeththunai nijam....!!
//
பறவையொன்றின் கூட்டை பிய்த்து
எறிகின்ற கொடூரத்திற்கு
சமமானவை இச்சித்தரிப்புகள்.
//
!
//
திருட்டுப்பட்டம் சூட்டப்படுகின்ற
குழந்தைகளாக வீதியில்
கிடக்கின்றன
இருள் நிறைந்த ப்ரியங்கள்.
//
:(
மூன்றுமே நல்லா இருக்கு. குறிப்பா மூன்றாம் கவிதை ரொம்ப நல்லா இருக்கு.
தொடர்ந்து நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
வாழ்த்துகள்.
Post a Comment