வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கென தரப்படும் பயிற்சியில் மிக முக்கியமானது Cross Culture Program என்றழைக்கப்படும் எதிர்கலாச்சாரத்தை பற்றிய பயிற்சி. குறிப்பாக அமெரிக்கா போன்ற வளர்நத நாடுகளுக்கு செல்லும் இந்திய பணியாளன் கவனத்தில் கொள்ளவேண்டிய பலவிஷயங்கள் இந்தப் பயிற்சியில் கற்றுத்தரப்படும். இந்த பயிற்சியில் ஈடுபடாமல் அமெரிக்காவுக்கு முதல் முறையாக செல்பவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். நான் சியாட்டலில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவம் இன்றும் சிரிப்பை வரவழைக்கிறது. அமெரிக்காவில் அடியெடுத்து வைத்து ஒரு மாதம் கழித்து என் டீமிற்கு புதியதாக ஒருவனை இந்தியாவிலிருந்து அனுப்பியது என் நிறுவனம். CC Program ல் கலந்துகொள்ளாமல் அவசரமாக அமெரிக்கா வந்துவிட்டான். ஒரு நாள் அவனுடன் நண்பர்கள் சிலர் STAPLES கடைக்கு சென்றோம். பேனாக்களும் பென்சிலும் வாங்கிவிட்டு நேராக கல்லாவிலிருந்த வெள்ளைக்காரியிடம் "ரப்பர் எங்கே இருக்கிறது" என்று கேட்க அவள் இங்கே நாங்கள் ரப்பர் விற்பதில்லை என்று சொல்லியிருக்கிறாள். பென்சில்,ஸ்கேல் எல்லாம் விற்கிறீர்கள் ஏன் ரப்பர் விற்பதில்லை என்று இவன் அப்பாவித்தனமாய் கேட்க "பென்சிலுக்கும் ரப்பருக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டுச் சிரித்திருக்கிறாள். குழம்பியவன் என்னிடம் வந்தபோது நானும் நண்பர்களும் விழுந்து விழுந்து சிரித்தோம். ரப்பர் என்றால் அமெரிக்காவில் ஆணுறை என்று பொருள். இன்றும் அவனுடைய செல்லப்பெயர் ரப்பர்தான்.
இந்தத் திரைப்படமும் எதிர்கலாச்சாரத்தை மையக்கருவாக கொண்டு எடுக்கப்பட்டதுதான். அமெரிக்காவிலிருந்து இந்தியா வரும் ஒரு அமெரிக்க பணியாளன் சந்திக்கும் இடர்கள்,சவால்கள்,மனிதர்கள் பற்றியது. டாட் என்கிற அமெரிக்க பணியாளனை அவனது நிறுவனம் இந்தியாவிலிருக்கும் கிளைக்கு அனுப்புகிறது.
இந்தியாவில் இருப்பது அவர்களுடைய கால்சென் டர். இந்திய பணியாளர்களுக்கு அமெரிக்க உச்சரிப்பை பற்றியும் கஸ்டமர்களிடம் பேசும் முறை பற்றியும் விவரிப்பது டாட்டின் வேலை.
Toddஐ Toad என்று உச்சரிப்பதில் ஆரம்பிக்கும் நகைச்சுவை பல இடங்களில் வாய்விட்டு நம்மை சிரிக்க வைக்கிறது. டாக்ஸி என்று நினைத்து ஒரு ஆட்டோக்காரனிடம் ஏமாறுவதும்,ஓடுகின்ற ரயிலில் டாட் ஏறுவதும் சிறுவனொருவன் ரயிலில் உட்கார இடம் தந்துவிட்டு டோடின் மடியிலேயே உட்கார்ந்துகொள்வதும் வெடிச்சிரிப்பை வர வைக்கும் காட்சிகள். காராபுரி என்கிற சிற்றூரில் இருக்கும் கால்சென்டருக்கு டோட் பயிற்சியாளராக வருகிறார். அங்கே வேலை செய்யும் ஆஷா என்ற பெண்ணுடன் இணக்கம் ஏற்பட்டு உறவில் முடிகிறது. அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதை திரையில் காண்க.
படத்தின் + :
டோடாக நடித்திருக்கும் நடிகரின் முக பாவங்கள் பெரிதும் கவர்கின்ற்ன. கலாச்சார வேற்றுமையின்போது எதிர்கொள்ளும் சமாளிப்புகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்திய டாய்லெட்டில் பேப்பர் இல்லாமல் இடதுகையை பார்க்கும் போதும் டோடின் நடிப்பு அற்புதம். இந்திய கால்சென்டரின் மேலாளராக வருபவரின் நடிப்பு.ஒளிப்பதிவில் ஒரு சேரியை கண்முன் கொண்டுவந்திருக்கும் விதம் மிக அருமை.
படத்தில் தென்பட்ட குப்பைகள்:
1.கதாநாயகி தேர்வு
2.இசை (இம்சை)
3.இந்தியாவில் எந்த கால்சென்டரில் மாடு கட்டியிருக்கிறார்கள்?
4.தனி அறையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் நம் இந்திய கதாநாயகி காமலீலைகளில் விளையாடுகிறார். காமசூத்திரம் நூலை படித்துவிட்டு இப்படி செய்யலாமா அப்படி செய்யலாமா என்கிறார். எல்லாம் முடிந்தவுடன் இதை நாங்கள் "ஹாலிடே இன் கோவா" என்போம் என்கிறார். இத்திரைப்படம் பார்க்கும் மேலைநாட்டவர்கள் இந்தியபெண்கள் அனைவரும் இப்படித்தான் என்கிற முடிவுக்கு வரும் அபாயம் இருக்கிறது.
மொத்தத்தில் ஒரு நல்ல கதைக்கருவை சொதப்பலான திரைக்கதையால் வீணடித்திருக்கிறார்கள். கதாநாயகனின் அப்பாவித்தனமான நடிப்புக்காக ஒரு முறை பார்க்கலாம்.
வெளியான ஆண்டு: 2006
மொழி: ஆங்கிலம்
நீளம்: 103 நிமிடங்கள்
-நிலாரசிகன்.
16 comments:
Nila,
Antha padam paarthaal enakku sirippu varigiratho illayo, neengal vivaritha vidhathilirundhe padathin nagaichuvai kaatchigalai ninaithu sirithu kondirunthen.
Ungal vimarsanam arumai......
Padam paarka thoondugirathu.....
Padam paarthuvittu meendum oru padhivu nichayam anuppuvean....
- Priya
நன்றி ப்ரியா.
கதாநாயகி தான் நாயகனுக்கு அக்கா ரேஞ்சில் இருப்பார். அது ஒன்றை தவிர ஒரு நல்ல காமெடி படம்.
இதுல நிறைய காமெடி கலந்து கட்டி நல்ல பண்ணி இருக்காங்க பாஸ் . கிளைமாக்ஸ் சீன் நல்லா மசாலா தடவி இருக்காங்க.
i saw this film twice in star movies..
i enjoyed and laughed throuht the film.
" Rubber" matter also there in the film...
//3.இந்தியாவில் எந்த கால்சென்டரில் மாடு கட்டியிருக்கிறார்கள்? //
படம் பார்க்கும் போது திட்டி கொன்டே பார்த்தேன் இந்த விஷயத்துக்காக
படத்தை நல்ல நகைச்சுவையுடன் எடுத்திருக்கிறார்கள். உதவியாளராக (மேனேஜரா) வரும் இந்திய நண்பரின் நடிப்பை பற்றி சொல்லவே இல்லையே...
சரியாகச் சொன்னீர்கள்...
கதாநாயகியின் தேர்வு சொதப்பல்...
உங்கள் விமர்சனம் அருமை...
//மஞ்சூர் ராசா said...
படத்தை நல்ல நகைச்சுவையுடன் எடுத்திருக்கிறார்கள். உதவியாளராக (மேனேஜரா) வரும் இந்திய நண்பரின் நடிப்பை பற்றி சொல்லவே இல்லையே...//
சொல்லி இருக்கிறேனே!
//இந்திய டாய்லெட்டில் பேப்பர் இல்லாமல் இடதுகையை பார்க்கும் போதும் டோடின் நடிப்பு அற்புதம். இந்திய கால்சென்டரின் மேலாளராக வருபவரின் நடிப்பு.//
வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி.
படத்தை விடுங்கள்.
படத்திற்கான அறிமுகத்திற்கு, தங்கள் அனுபவத்தோடு எழுதியதை ரசித்து சிரித்தேன்.
:-)))))))
//படத்தில் தென்பட்ட குப்பைகள்:
1.கதாநாயகி தேர்வு //
அப்படியா, சரி விடுங்க, அழகு என்பது அவரவர் கண்ணிலே :)
////படத்தில் தென்பட்ட குப்பைகள்:
1.கதாநாயகி தேர்வு //
அப்படியா, சரி விடுங்க, அழகு என்பது அவரவர் கண்ணிலே :)/
சங்கர்,
கதாநாயகி அழகில்லை என்று நான் குறிப்பிடவில்லையே. கதாநாயகி தேர்வுக்கு அழகு மட்டுமே காரணி என்கிற உங்களது பார்வை ஆச்சரியமளிக்கிறது.
இந்தப் படத்திற்கு அதற்கு மேல் அழகு தேவையில்லை என இயக்குனர் நினைத்திருக்கலாம். எனக்கும் அப்படித்தான் தோன்றியது.
சங்கர்,
கதாநாயகி அழகில்லை என்று நான் குறிப்பிடவில்லையே. கதாநாயகி தேர்வுக்கு அழகு மட்டுமே காரணி என்கிற உங்களது பார்வை ஆச்சரியமளிக்கிறது//
intha pathil nallaayirukku....
ippadi oru padam irukkunu therinthathil santhosam....:)
// இந்தியபெண்கள் அனைவரும் இப்படித்தான் என்கிற முடிவுக்கு வரும் அபாயம் இருக்கிறது//
i too felt the same..... why all movies are takenlike this??
Post a Comment