Saturday, February 06, 2010

ஜெயமோகனின் "வாழ்விலே ஒரு முறை"

ஜெயமோகனின் "வாழ்விலே ஒரு முறை" நூலில் ஒரு பகுதி, அவர் அவரது டைரியில் எழுதி வைத்திருந்த சில வரிகள்.
கவிதையாகவும் ஆகாமல், கதையிலும் உபயோகிக்க இயலாத வரிகள். அதில் சில மிக
அருமையாக இருந்தன. அவற்றில் சில....

* எதிர்காற்றில் நடந்துவரும் சுடிதார்ப் பெண்போல் என் மொழியில் என் சுயம்
வெளிப்பட வேண்டும், தெரியக்கூடாது.

* பரதநாட்டிய உடையில் சந்தைக்கு போகமுடியாதென யாராவது நம்
கவிஞர்களுக்குச் சொல்லக்கூடாதா?

* மென்மையான சிறு பூனைக்குட்டி, மிருகம் என்ற சொல்தான் அதற்கு எத்தனை பாரம்!

* உண்மையை சொல்லும்போதெல்லாம் நம்மை நல்லவர்களாக உணரச்செய்யுமளவுக்குக்
கொடூரமானதாக உள்ளது இந்த வாழ்க்கை.

* யானை குனிந்துகொள்ளுமென நம்பி மரக்கிளையில் மண்டை இடித்துக் கொண்ட ஒரு
யானை பாகனை நான் அறிவேன்.

* சிந்தனையாளர்களை ஒற்றை மேற்கோளாக மாற்றிவிடுகிறோம், மரத்தை
பின்னோக்கித் தள்ளி விதையாக்குவது போல.

* கண்ணில்லாதவர் முறித்து தாண்டும் சாலையில் ஓடிக் கொண்டிருப்பவை, ஒலிகள்.

* ரயில் முழக்கம் ஒரு காதசைவுக்கு மட்டுமே என நினைக்கும் சேற்றெருமையின்
உலகில்தான் எத்தனை நிம்மதி.

* அம்மாவை அசடாக எண்ணிக் கொள்வதற்கு அவள் பாசம் தான் காரணமா?

* முற்போக்கு இலக்கியத்திற்கும் அரசாங்கப் பிரசாரத்திற்கும் இடையேயான
வேறுபாடு என்னவென்றால் முன்னதற்கு அரசாங்கம் இல்லை.

* மலைத்தொடருக்கு முன்னால் நின்று முணுமுணுத்துக் கொண்டேன் நான் நான் என்று.

* ஓடும் பேருந்தின் ஓரத்து வீடுகளிலெல்லாம் ஒரு கணம் வாழ்ந்து வாழ்ந்து சென்றேன்

(இந்நூலை அறிமுகபடுத்திய நண்பன் சித்தார்த்துக்கு நன்றி. இது 2008ல் எழுதப்பட்டது.மீள் இடுகை)

5 comments:

said...

wow...thanks for sharing nila...

said...

பூனைக்குட்டிக்கு மிருகம் என்ற பெயரே பாரம். என்ன அழகான வரிகள்!
அம்மாவை அசடாக எண்ணிக் கொள்வதற்கு அவள் பாசம் தான் காரணமா?//
உண்மையாகவே என் குழந்தைகள் "ஏம்மா! உனக்கு இது கூட தெரியல என்னும் போது என் அலுவலக கர்வங்களை தூக்கி எறிந்து சந்தோஷப்படுகிறேன்.

said...

நல்ல பகிர்வு நண்பா. 'வாழ்விலே ஒரு முறை' ரசித்து வாசித்த நூல்.

said...

நன்றி நண்பர்களே..

said...

ovontrilum orazhagu...

aththanaikkum siru siru puruva uyarththalkal parisaanathu...

//கண்ணில்லாதவர் முறித்து தாண்டும் சாலையில் ஓடிக் கொண்டிருப்பவை, ஒலிகள்.
//

ithu innum pidiththathu....