Monday, February 15, 2010

பூக்களின் சினேகிதிக்கு...

 
1.
எப்பொழுதும்
மூன்று கற்களை கொண்டுவருகிறாய்.
எதற்காக இந்தக் கற்கள் என்கிற
கேள்விக்கு பதிலில்லை உன்னிடம்.
புன்னகை உதிரும் தருணத்தில்
வெள்ளையாகவும்
கண்ணீர் உதிரும் கணத்தில்
கருமை நிறமாகவும் அவை மாறுகின்றன.
உனக்கென வெகுநேரம்
காத்திருந்தவனின்
புன்னகையை நீ கொல்லும்போது
சிகப்பாக மாறிவிடுகின்றன.
பின்,
எனக்கும் இதயம் இருக்கிறது
என்று நீ அழும் பொழுதில்
எனக்குள் துடிக்கும் சிகப்புக்கல்
உடைந்து உதிர துவங்குகிறது.

2.
காற்றில்லாத குமிழிக்குள்
அமர்ந்திருக்கிறேன்.
உலகிலிருந்து துண்டிக்கப்பட்ட
பிரக்ஞையின்றி கழிகிறதென் பொழுதுகள்.
எதிர்பார்ப்பின் அர்த்தங்களும்
காத்திருப்பின் அபத்தங்களும்
சிறு சிறு முட்களாய் உடலை கிழிக்கின்றன.
குருதி நதியென ஓடுகையில்
எனக்கான காற்றை
சுமந்து வருகிறாய்.
தொலைவில்,
வெக்கையில் கருகிய பூச்செடியில்
விழுந்து விம்முகிறது
முதல் மழைத்துளி.
-நிலாரசிகன்.

13 comments:

said...

super and nice :)

said...

ஆழமான வரிகள்....
அசத்தலா இருக்கு...

said...

ஆழமான வரிகள்....
அசத்தலா இருக்கு...

said...

Awesome... :)

said...

கவிதைகள் அருமை நிலாரசிகன்.

said...

Wow!!!

said...

ஆழ்ந்த வரிகள் நிலா...

தனிமையின் உச்சத்தை தொட்டு, மழைத்துளியில் முடித்தது அருமை.

said...

Aazhamaana vali,
Antha valiyin varigal,
Oru Idhayathin Visumbal ......

- Priya

said...

வாழ்த்துக்கு நன்றி நண்பர்களே :)

said...

romba nalla irukku

said...

அருமை நிலா..

said...

2-vathu pidiththathu....

vazhthukal nila!

said...

solla maranthuttene.....

padam remba azhagu..!

ullang kaiyil irunthu viduthalaiyaagi
ulakam yennum sirsikkul maattik kollum blue butterfly...