Thursday, February 18, 2010

நதி



கால்கள் இழந்த கிழவனொருவன்
ஊர்ந்து செல்லும் வழியெங்கும்
கற்களை பொறுக்கியபடி செல்கிறான்.
அவனது கூடையை நிரப்புகின்றன
கருங்கற்கள்.
நதிக்கரையை அடைந்தவுடன் ஒவ்வொரு
கற்களாக நீரில் எறிந்து மகிழ்கிறான்.
கற்கள் எழுப்பும் அலைகளில் .
மெல்ல கால் முளைத்து
பால்யத்திற்குள் நுழைகிறான்.
தாய்மையின்
சாயலுடன் மிதந்தபடி நகர்கிறது
அந்நதி.
- நிலாரசிகன்

16 comments:

said...

//தாய்மையின்
சாயலுடன் மிதந்தபடி நகர்கிறது
அந்நதி.//

அழகான ஆழமான வரிகள்...

said...

Awesome!!

said...

கவிதை அருமை.

said...

க‌விதை ந‌ன்று

said...

அழகான வரிகள்

said...

Nice post Nila! :)

said...

ஆஹா..ஆஹா..

said...

வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி :)

said...

NALLA ILAMAI THIRUMBUKIRATHU. PERUSUKAL ITHAI AMAA AMMA ENA THALAIYAATTA SEIYUM KAVITHAI.

said...

அன்புத்தம்பி....!

அற்புதம்.. அற்புதம்..!
ரொம்ப பிடிச்சிருக்கு.

said...

:)

said...

அற்புதமான வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு.
செம்பகம்

said...

அற்புதமான வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு.
செம்பகம்

said...

நன்றி மதுரை சரவணன்,அண்ணா,கேபிள்ஜி,செம்பகம் :)

said...

நல்ல கவிதை. நீர்த் ததும்பும் நதி
தாய்மையின் உயிர்ப்பிடம்தான்

said...

ஆஹா அருமை

மிக அழகான கவிதை

நன்றி
ஜேகே