
வரைந்து முடித்த ஓவியத்தின்
உள்ளிருந்து சிறகுகள் படபடக்க
வெளியேறியது முதல் ஆந்தை.
உலகின் மிகச்சிறந்த கவிதையின்
கடைசி வரிக்குள்ளிருந்து வினோத
ஒலியெழுப்பியது இரண்டாவது
பதின்ம வயது சிறுவனின்
கனவுக்குள் உக்கிர
தாண்டவமாடிக்கொண்டிருந்தது
மூன்றாவது.
நான்காவது,ஐந்தாவது
ஆறாவது
ஆந்....
என் அலறலில் விழித்துக்கொண்டது
இரவு.
-நிலாரசிகன்.
8 comments:
//உலகின் மிகச்சிறந்த கவிதையின்
கடைசி வரிக்குள்ளிருந்து வினோத
ஒலியெழுப்பியது இரண்டாவது//
nice lines
பின் நவீன கவிதையும் நல்லா எழுதறீங்களே..
ஓவியம் அழகியல் ஆந்தை கொஞ்சம் ஆபாயத்தின் குறியீடு.
கவிதை ஆசுவாசம். வினோத ஓலி ஒரு வித பயம்.
ம்ம்ம்ம் நல்லா இருக்குங்க
ஆந்தை என்றாலே எனக்கு பயம்
நவீனத்துவ கவிதை கலக்கல்
வாழ்த்திய அன்பர்களுக்கு என் நன்றி :)
thoongi remba naalaatchonnu ketkath thonuthu?
matrapadi yenakku onnum puriyala..
முடிவில்லாதது போலத் தெரிகிறது!
அருணா,
முடிவில்லாததுதான் இரவும்,கவிதையும் :)
இரசிகை,
நீங்கள் சொன்னது உண்மைதான்.நான் உறங்கி பல மாதங்கள் ஆகிறது.
kavithaiyilirunthum athu mattume purinthathu..
appadiththaannum kelvip patten:(
"intha nilamaiyum maarum"-athai ungalukkul utchchariththuk kollungal..
vidiyaatha iravethum kidayaathu:)
Post a Comment