வெயிலின் உக்கிரத்தில் நிழல்
தந்து மறைந்தவர்களுக்கும்..
தோல்வியின் உச்சத்தில்
தோள் கொடுத்து உடன் நின்றவர்களுக்கும்..
ஜெயத்தில் சுயம் வெளிப்படுத்தி
தகிக்கும் பாலையாய் மாறியவர்களுக்கும்..
கனவுகளில் கல்லெறிந்து காணாமல்
போனவர்களுக்கும்..
வாழ்நாள் நண்பன் என்றுரைத்து
வார்த்தை முடியும் முன்பே மறைந்தவர்களுக்கும்…
வீழ்ந்தபோது இது வீழ்தல் அல்ல
விதைத்தல் என்று புரியவைத்தவர்களுக்கும்..
சுயநலத்தின் உயிர்வடிவமாய்
விலகி பறந்தவர்களுக்கும்..
தமிழால் இணைந்து இதயம் நுழைந்து
தழைப்பவர்களுக்கும்..
கவிதைக்காக எப்போதும் நேசிக்கும்
நல்லிதயங்களுக்கும்...-நிலாரசிகன்.


