Wednesday, December 01, 2010

உடைதலின் கணம்



1.
துரோகத்தின் நுழைவு வாயிலின்
அருகே சென்று திரும்புகிறது
ஒரு குழந்தையின் நிழல்.
ஒப்பீடுகளற்ற அன்பின் கண்ணாடி
உடைதலின் கணத்தை கடந்துவிடுகிறது.
ஈரம் கடக்கும் இதழ்கள்
உப்பின் சுவை உணர்ந்து மெளனிக்கின்றன.
பிரக்ஞையின்றி தூரம் வெறித்த
பார்வையுடன்
காலடியில் வாலாட்டும் நதியில்
கல்லெறிந்துகொண்டிருக்கிறாய்
நீ.

2.
இதற்கு பெயரிடுவது பற்றி
சிந்திக்கலாம்.
இதற்கு ஒரு பூனையின் பெயரை
வைப்பது பொருத்தமாக தோன்றுகிறது.
ஏனெனில்,
இதுவொரு தவறை
பாத சத்தமின்றி நிறைவேற்றவும்
ஒரு நேசத்தின் இறுகிய முடிச்சை
பற்களால் அவிழ்க்கவும்
முயல்கிறது.
இதற்கு பெயரிட
நாய்க்குட்டியின் உருவிலிருந்து
வெளியேற வேண்டும்
நான்.

-நிலாரசிகன்.

10 comments:

said...

வலியைக் கூட அழகாய் சொல்ல முடிவது கவி மொழியில் மட்டுமே சாத்தியமோ ?!

நன்று நண்பரே... தங்கள் பெயரும், கவிதையும்...

said...

///////ஈரம் கடக்கும் இதழ்கள்
உப்பின் சுவை உணர்ந்து மெளனிக்கின்றன.
பிரக்ஞையின்றி தூரம் வெறித்த
பார்வையுடன்
///////


மெல்ல உயிர் குடிக்கும் வார்த்தைகள் அருமை வார்த்தை அலங்காரம் . பகிர்வுக்கு நன்றி

said...

அருமையான கவிதைகள்!

said...

நல்லா இருக்குங்க...

said...

"நிலா ரசிகனின்" கவிதைக்குள் வார்த்தைகள் எல்லாம் பாசமாகவும், பகிரங்கமாகவும் பேசும்!
வார்த்தைகளை எதிர்பார்த்து காத்திருகிறேன்!!!

said...

இது தாங்களுக்கு மட்டும் சாத்தியம் கவிஞரே! வழமை போல் இன்றும் ... அருமை!

said...

நண்பர்களுக்கு நன்றி..

said...

//ஒப்பீடுகளற்ற அன்பின் கண்ணாடி
உடைதலின் கணத்தை கடந்துவிடுகிறது.
ஈரம் கடக்கும் இதழ்கள்
உப்பின் சுவை உணர்ந்து மெளனிக்கின்றன.//
ஆழமான வரிகள்...வாசிக்க சலிக்காத கவிதைகளை எழுதத் தொடங்கிவிட்டாய் - உயிர்மையில் புத்தகம் வெளிவரப் போகிறது தொடர் வெற்றிகளுக்கு அன்பார்ந்த வாழ்த்துக்கள் நிலா!!!!

said...

அருமையான கவிதைகள்!

said...

aazham......