Saturday, March 19, 2011

அதனதன் வானம்



சிறகுகளின்றி உயரத்தில் அலையும்
அதன் பறத்தலை வியப்புடன்
உற்று நோக்குகின்றன
இரு தேன்சிட்டுகள்.
குளிர்ந்த மழை இரவுகளில்
கதகதப்புடன் அருகருகே
வசித்திருந்த நாட்களும்
உயிரின் நீட்சியான
குஞ்சுகள்
முட்டையுடைத்து
வெளியேறிய நாளை பற்றியும்
நினைத்துக்கொண்டே
அதனை பார்க்கின்றன.
சற்றே வேகமான காற்றில்
தன்னைப் படைத்த
குருவிகளின் மேல்
பறந்துகொண்டிருக்கிறது
சிறகுகள் முளைக்கத்துவங்கிய
கூடு.
 

-நிலாரசிகன்.
[இவ்வார கல்கி இதழில் வெளியான கவிதை]

7 comments:

said...

வாழ்த்துக்கள்

said...

நல்கவிதை. வாழ்த்துக்கள்.

said...

மிக அருமை.

குறிப்பாக இவ்வரிகள்,

**தன்னைப் படைத்த
குருவிகளின் மேல்**!

said...

ஆஹா பூங்கொத்து!

said...

மிக அருமையான கவிதை. மிகவும் ரசித்தேன்.... :)

said...

மிக அருமையான கவிதை. மிகவும் ரசித்தேன்.... :)

said...

!.........

vaazhthukal nila:)