
என் தோளில்
சாய்ந்து
நீ அழகாய் ஆயிரம்
கதைகள் பேசிய அற்புத தருணத்தில்
தோன்றி இருக்கலாம்...
என்னைப் பிரிந்து
தூரத்தில் ஒரு சிறுபுள்ளியாய்
நீ மறையும் தருணத்தில்
தோன்றி இருக்கலாம்....
யாரோ ஒருவனுக்கு
நீ மனைவியாக போகிறேன்
என்று தொலைபேசியில்
சொன்ன தருணத்தில்
தோன்றி இருக்கலாம்...
எப்போதும் தோன்றாத
ஒரு
உணர்வு இனி என்னிடம்
நீ பேசப்போவதில்லை
என்று உணர்ந்ததும்
கண்ணீராய் வழிந்தோடுகிறதே
இதற்கு என்ன
பெயர் சொல் பெண்ணே!
5 comments:
"உணர்வுகள் விவரிக்கப்பட வேண்டியவை அல்ல....
உணரப்பட வேண்டியவை." என்ற உண்மையை அழகாய் உணர்த்தியது உங்கள் வரிகள் [நீ பேசப்போவதில்லை என்று உணர்ந்ததும் கண்ணீராய் வழிந்தோடுகிறதே இதற்கு என்ன பெயர் சொல் பெண்ணே!].... உங்கள் கண்மணியாள் மட்டும் அல்ல எவராலும் சொல்லமுடியாது இதற்கான பெயரை......
enku nadatathu unkum nadtahthoo neela
Atan peyar solla eyalaathu NilaRaseegan, kaaranam iruvar nenjangal mattume arium antha unarvugalai...
Idhayathil Ezhuthia uravugal endrum irappathillai NilaRaseegan.
Irandu Idhayangal mattume Atharku Saatchi.
En Mana nilaiyai prathibalitha kavithai. En manathai paathithu vittathu.
இனிமே தெரிஞ்சு ஒன்னும் ஆகப் போறதில்லை நிலா.
நல்லாயிருக்கு
Post a Comment