Wednesday, December 12, 2007

இதயத்தால் இணைந்திடுவோம் தோழர்களே!





வினோத் Saivite பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவன்.
வண்ண வண்ண கனவுகள் சுமந்து திரிகின்ற பட்டாம்பூச்சி.

வினோத்தின் அப்பா உயிருடன் இல்லை. அம்மா ஒரு தினக்கூலி.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன் வினோத்.

வினோத்திற்கு இருதயத்தில் துளை இருப்பதாக மருத்துவர்கள்
கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய
வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதற்கான செலவு ரூ. 1.5 லட்சத்தை அப்பல்லோ மருத்துவமனை
ஏற்றுக்கொண்டது.
இதர மருந்து செலவுக்காக ரூ 25 ஆயிரம் தேவைப்படுகிறது.
மனம் இருக்கும் நண்பர்கள் உதவ முன்வரலாம்.
உதவ விரும்பும் அன்பர்கள் கீழ்கண்ட இணையதள முகவரிக்கு
சென்று தங்களது உதவியினை அளிக்கலாம்.
http://www.helptolive.org/projects_detail.asp?id=62

இதேபோல் பிறந்து மூன்று மாதமே ஆன குழந்தை
சந்துருவிற்கும் இருதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய
திட்டமிடப்பட்டுள்ளது.
உதவ விரும்பும் அன்பர்கள் உதவலாம்.
மேலதிக தகவலுக்கு: http://www.helptolive.org/projects_detail.asp?id=63

2 comments:

said...

நிலாரசிகன்,

உங்கள் வலைப்பதிவை சில மாதங்களுக்கு முன் பார்த்து அதன் முலம் HelptoLive.org-ல் இனைந்துள்ளேன். வசந்தின் அறுவைச்சிகிச்சைக்கு நான் என்னால் முடிந்த உதவியல்ல கடமையை செய்து இருக்கிறேன். தங்களின் வலைப்பதிவு அளித்த இந்த வாய்ப்புக்காக மிக்க நன்றி

தினேஷ்

said...

மிக்க நன்றி தினேஷ்...

உங்கள் போல் நல்மனம் கொண்டவர்கள் நம் தேசத்திற்கு வளம் சேர்க்கிறார்கள்.

நன்றிகள் பல.