நிச்சயமற்ற ஒரு நேசத்தை
உனக்குப் பரிசாய் தந்து
தனிமைச் சிறைக்குள்
வாழ விரும்பும்
மழைமேகமாக...
இதயக்கல்வெட்டில் நீ
எழுதுகின்ற நேசமொழிகளை
இதயமின்றி வெட்டிவீசுகின்ற
வார்த்தைக்கோடரியாக...
உனக்குள் ஒரு உலகை
உருவாக்கி உன்னைவிட்டு
வெகுதூரம் பறந்துவிடத்துடிக்கும்
ஊனப்பறவையாக...
உன்னைப் பிரிந்துசெல்ல
தினம் தினம் என்னை
நானே செதுக்குகிறேன்
புதுப்புது உருவங்களாக...
6 comments:
Maunamaka..
Idhayathai Sethukivittai..
By,
Pandian.
உங்கள் கவிதைக்கு இணையாக புகைப்படங்களும் கலகுகின்றன
ரொம்ப நன்றாக செதுக்குகிறீர்கள்!கதைகளும் ,கவிதைகளும் ரொம்ப நன்றாகவே செதுக்குகிறீர்கள்!
அருணா
நீங்கள் ஒருவாக்கும் புது புது சிற்பங்கள் காலத்தின் அழியா பொக்கிசமாக என் வாழ்த்துக்கள்.
பிரிந்திருப்பது வலி என்றால், பிரிந்து செல்லும் வழி அதையும் விட அதிகம் தான்.
!!
Post a Comment