Sunday, November 04, 2007

மழைநாளொன்றின் கிறுக்கல்கள்...


1.கறுப்புவெள்ளை மாலையொன்றினை
சிறகடிப்பால்
வர்ணமடித்துச் செல்கின்றன
ஒரு ஜோடி தேன்சிட்டுகள்.

2. இலை சிந்தும் துளியின்
அழகை முழுவதுமாய்
பருகுகின்றது பூமி.

3. மழையில் குளித்த
சிறுவனின் முகச்சுழிப்பில்
வற்றத்துவங்குகிறது சேறு.

4.நகருக்கு வெளியே
மலையென குவிந்திருக்கும்
குப்பையிலும் மலர்ந்திருக்கின்றன
பூக்கள்.

5. விரித்த குடையை
மடக்கும் போது கையில்
குத்திவிட்டது.
யாருக்குத்தான் மழை
பிடிக்காது?

6. ஓடிச்சென்று வாசல்
மூடுவதற்குள் உள்வந்து
தேனீர் கேட்கிறான் மழைவிருந்தாளி.

5 comments:

said...

//இலை சிந்தும் துளியின்
அழகை முழுவதுமாய்
பருகுகின்றது பூமி.//

ஒருநாள் மழைப் பொழுதில் சொட்டச் சொட்ட நனைந்த இலையைப் பார்த்துக் கொண்டிருந்த போது எனக்குள் தோன்றிய சொல்லத் தெரியாத உணர்வுகள் இங்கே உங்களின் வார்த்தைகளாய். மிகவும் ரசித்தேன். :)))))

//ஓடிச்சென்று வாசல்
மூடுவதற்குள் உள்வந்து
தேனீர் கேட்கிறான் மழைவிருந்தாளி.//

கலக்கறீங்க.

- சகாரா.

said...

//இலை சிந்தும் துளியின்
அழகை முழுவதுமாய்
பருகுகின்றது பூமி.//

இது மட்டும்தான் நல்லாயிருக்கு!!

Anonymous said...

migavum sariyana kelvi nila, yarukkuthan mazhai pidikama pogum? intha kavithai padikum pothu yen kannukulla vanthu nikkira kaatchi yenna theriyuma? ammavuku theriyama mottai maadi aeri poi mazhaila ,thanduvadam silirkkara alavu nanainthu thittu vanguna niyabagamthan vanthathu..
snegamudan nirandhari.

said...

முகத்தில் தெறிக்கும்
மழைத் துளிகளின் குளிர்ச்சி
உங்கள் வரிகளிலும்...

said...

"theneer"-spell sariyaa?

"kuppaiyilum malarntha pookkal"
mazhai virunthaali....

azhagu!!