Tuesday, October 30, 2007

தவிப்புடன் ஒரு பாடல்...



முன்பாடல் சுருக்கம்:

காதலனை பிரிந்த ஒரு காதலி தவிப்புடன் பாடுகின்ற பாடலாய்
என் வரிகள்....


(ஒருநாள் பின்னிரவில் நான் விழித்திருந்தேன் உன் பிரிவால்
உள்ளம் தவித்திருந்தேன்..

ஜன்னலோர இரவுமழையில் நான் நனைந்திருந்தேன் உன் நினைவால்
என்னை மறந்திருந்தேன்..)


உன் காதல்பெற்ற மறுநொடி உயரப்பறந்தேன் உன்காதல் இழந்த
மறுநொடி சிறகிழந்து விழுந்தேன்

சிறகிழந்த பறவை நான் வாட, இறகென்றே என் காதலை
உதிர்த்து பறந்தாய் நீ

என்னைத் தேடி நீ வருவாய் என்றே காத்திருந்தேன், மண்ணைத்தேடி
வர மறந்த மழையாய் நீ

உன்னைத் தேடித் தேடி கால்கள் காணாமல் போனதே கண்கள் இரண்டும்
சகாராவானதே..

(ஒருநாள் பின்னிரவில் நான் விழித்திருந்தேன் உன் பிரிவால்
உள்ளம் தவித்திருந்தேன்..

ஜன்னலோர இரவுமழையில் நான் நனைந்திருந்தேன் உன் நினைவால்
என்னை மறந்திருந்தேன்..)


காரணங்கள் இன்றி பிரிவும் இல்லை
ரணங்கள் இன்றி காதலும் இல்லை

சோகங்கள் இன்றி காவியம் இல்லை
மேகங்கள் இன்றி வானமும் இல்லை

வாசல் தேடி நீ வரும் நாள் வாழ்க்கையற்று போவேனோ?
காதல் தேடி நீ வரும் நேரம் கற்சிலையாய் மாறிடுவேனோ?

வரம் கேட்ட என் நெஞ்சுக்கு வரமென்ன பிரிதலா?
புறம் சென்ற உன் நெஞ்சுக்கு ஈரமில்லை ஏனடா?

(ஒருநாள் பின்னிரவில் நான் விழித்திருந்தேன் உன் பிரிவால்
உள்ளம் தவித்திருந்தேன்..

ஜன்னலோர இரவுமழையில் நான் நனைந்திருந்தேன் உன் நினைவால்
என்னை மறந்திருந்தேன்..)

என் மெளனம் தின்றே உயிர்வாழ்கிறாய், உன் மெளனம்
கண்டே உயிர்வேகிறேன்...

கனவில் கூட நீ என்னை பிரிவதேன்? கவிதையில் கண்ணீராய நான்
கரைவதேன்?

ஏதோ ஒரு நம்பிக்கை எனக்குள் எப்போதும் தளிர்த்திருக்கும் மழை
காணும் ஆவலில் இந்தப்பூ எப்போதும் விழித்திருக்கும்..

5 comments:

Anonymous said...

"என் மெளனம் தின்றே உயிர்வாழ்கிறாய், உன் மெளனம்
கண்டே உயிர்வேகிறேன்..." arumaiyana varigal nilaraseegan.

snegamudan nirandhari.

said...

சூப்பர் பாடல்.
எல்லா வரிகளும் நல்லா இருக்கு.

//வாசல் தேடி நீ வரும் நாள் வாழ்க்கையற்று போவேனோ?
காதல் தேடி நீ வரும் நேரம் கற்சிலையாய் மாறிடுவேனோ?//

சொல்லத் தெரியாத உணர்வுகள் இருக்கு இந்த வரிகளில்.

//ஏதோ ஒரு நம்பிக்கை எனக்குள் எப்போதும் தளிர்த்திருக்கும் மழை
காணும் ஆவலில் இந்தப்பூ எப்போதும் விழித்திருக்கும்..//

காதலன் பிரிந்தாலும், அவன் நிச்சயம் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையோடு கானலில் தூண்டிலிடும் பெண்ணின் மனதை உணர்த்தியிருக்கீங்க.

பாடலுக்குப் பொருத்தமான படத்தையும் வெளியிட்டு அசத்தியுள்ளீர்கள். :)

- சகாரா.

said...

பாடலின் வரிகள் ந‌ல்லா இருக்குங்க‌...
ஆனா அது என்ன‌ "ஒருநாள் பின்னிரவில்"....

ம‌ற்ற வ‌ரிக‌ள் மிக ந‌ன்றாக‌ இருப்பினும்... பாட‌லை ப‌டிக்கும்போது ப‌ல‌ ஐய‌ப்பாடுக‌ள் என‌க்குள்..
இது காதல‌னை பிரிந்த‌ காத‌லியின் பாட‌லா இல்லை.. காத‌லைனை தேடும் காத‌லியின் பாட‌லா, இவ‌ள் காத‌ல் என்ன‌ ஒருத‌லைக் காத‌லா என்று ப‌ல‌ ஐய‌ப்பாடுக‌ள் எனக்குள்..
அதனால் தாங்கள் நினைத்த பாட‌லின் க‌ருவோடு பாட‌ல் வ‌ரிக‌ளின் க‌ருத்துக்க‌ள் ஒன்றியுள்ள‌தா என்ப‌தை ஒருமுறை ச‌ரிபார்த்துக்கொள்ள‌வும்..

ந‌ன்றி.

said...

Excellent lines..(உன் காதல்பெற்ற மறுநொடி உயரப்பறந்தேன் உன்காதல் இழந்த
மறுநொடி சிறகிழந்து விழுந்தேன்). I like this kavithai very much...

said...

intha kangal kaneer sinthik kondethaan irukkumaa?

athuve.. vethanai!!!