Monday, November 12, 2007

நடைபோடும் நதியாக...

சலசலப்பால் புலம்பியபடி
ஓடுகின்ற இந்த ஆறு
என்னை எனக்கு அறிமுகம்
செய்கிறது.

ஆற்றுக்குள் உருளுகின்ற
கூழாங்கற்கள் எனக்குள்
வசிக்கும் சிற்பத்தை
நினைவுபடுத்துகிறது...

நிஜத்தின் கரங்கள்
என் உயிரை இறுக்க
ஆற்றைக் கடந்து
செல்கிறேன்.

எல்லா ஆறுகளும்
கடலைச் சேருவதில்லை.

3 comments:

said...

வாழ்க்கையில் ஞானிகளின் ஆயிரமாயிரம் தேடல்களுக்குப் பின் கிடைக்கும் சித்தாந்தத் தெளிவின் செவ்வொளியாக இக்கவிதை அமைந்துள்ளது...

ரொம்ப அருமையான கவிதை...

ஆனால் ஏதோ ஒரு இடத்தில் ஒரு சின்ன இடைவெளி இருப்பதாக உணர்கிறேன்.. அந்த‌ இடைவெளி என்ன‌ என்ப‌து என‌க்கு ச‌ரியாக‌ விள‌ங்க‌வில்லை.. இடைவெளி நிர‌ப்பப்ப‌ட்டால் இன்னும் அருமையாக‌ இருக்கும்.. ஆயினும் இந்தக் கருத்தை முழுமையாக என்னால் கூற இயலாது.. ஏனெனில் இடைவெளி கவிதையிலா இல்லை விளக்கம் தெரிவிக்கும் என் மூளையிலா என்பதை நான் இன்னும் சரியாக கணிக்கவில்லை...

இவ்வ‌ள‌வு நாள் உங்கள் கவிதைக்குள் வைர‌முத்துதான் ஒளிந்துள்ளாரோ என்று ஐய‌ம் கொண்டேன்...த‌ற்ச‌ம‌ய‌ம் அவ‌ருட‌ன் க‌ண்ண‌தாச‌னும் இணைந்து கொண்டாரா என்று துப்ப‌றிகிறேன்..

த‌ங்க‌ள் க‌விதையை த‌ங்க‌ள் க‌விதையாக மட்டும் காணாம‌ல், ம‌ற்ற‌ க‌விஞ‌ர்க‌ளையும் அதில் தேடிய‌ பெரும் குற்ற‌த்திற்கு மாப்பு கேட்டுக்கொள்கிறேன்.. உங்க‌ளுக்கு முன் அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் அறிமுக‌மாகி விட்ட‌தால் இப்ப‌டி இணைத்துத் தேடி பார்க்கும் புத்தி என்னையும் மீறி வந்துவிடுகிற‌து..

க‌விதையின் க‌டைசி வ‌ரி நெஞ்சை மிக‌வும் அழுத்துகிற‌து..

கவிதை மிக்க ந‌ன்று.

said...

//எல்லா ஆறுகளும்
கடலைச் சேருவதில்லை.//

நிதர்சனமான வரிகள்.

- சகாரா.

said...

nitharsanam........