Monday, September 29, 2008

இரு கவிதைகள்

1.கவிதையின்றி அலைதலின் அவஸ்தைகள்

கவிதைகளை துறந்துவிட்டு

சில காலமாய் திரிந்துகொண்டிருந்தேன்.

கற்பனைகள் தூர்ந்து,

கனவுகள் தகர்ந்து,

பாதாளத்தின் வாய்பிளந்து

என்னை உள்ளிழுத்துக்கொண்டது.

இருள் கவிந்திருந்த அவ்விடத்தில்

தொலைந்த பேனாக்களை

தேடிக்கொண்டிருந்தனர்

எந்திரத்தனம் நிறைந்த

என்னையொத்த மனிதர்கள் சிலர்.

2. சுயத்தை எரித்தல்

மிகுந்த வெம்மையாயிருந்தது

ஒரு சொல்.

வெம்மையின் கதிர்கள் முதலில்

நுழைந்தது செவியில்.

செவிக்குள் நுழைந்த அச்சொல்லின்

வெட்பம் இதயத்திற்கு இடம்பெயர்ந்திருந்தது

வலியின் நீட்சியில்.

இதயம் கருகி கண்ணீராய்

வெளியேறுகையில்

மறுசொல்லுக்காய் காத்திருக்க

ஆரம்பித்தது சுயம்.

-நிலாரசிகன்

நன்றி: நவீன விருட்சம்

7 comments:

said...

இரண்டு கவிதைகளும் அருமை..
:)))

said...

அதிலும் இரண்டாவது கவிதை மிக அருமை.
கலக்கீட்டீங்க‌.. :)))))))))

said...

அவஸ்தைகள் அருமை. தொலைத்த பேனாவையே திரும்பவும் கண்டெடுப்பவர்கள் நன்மை அடைந்தவர்கள்தான். சுயத்தை எரித்தல்- உண்மைதான். (இதே போன்ற கருத்தில் ஈரோடு தமிழன்பனின் கவிதை ஒன்றும் உள்ளது.)

said...

how to change blogspot into a .com?
that is
www.nilaragan.blogspot.com to www.nilarasigaanonline.com

pls help....
laranz.joe@gmail.com

said...

//இருள் கவிந்திருந்த அவ்விடத்தில்

தொலைந்த பேனாக்களை

தேடிக்கொண்டிருந்தனர்

எந்திரத்தனம் நிறைந்த

என்னையொத்த மனிதர்கள் சிலர்//

அற்புதமான வரிகள்!!!

said...

//இதயம் கருகி கண்ணீராய்

வெளியேறுகையில்

மறுசொல்லுக்காய் காத்திருக்க

ஆரம்பித்தது சுயம்.//

உண்மை, உண்மை, உண்மை...
அழகான வரிகள்!!!

said...

2 vathu kavithai.......

disease conditions ku padikkum pathophysiology pola irunthathu:)