Monday, December 15, 2008

அலைபேசி தொலைந்த தினம்..

அலைபேசிக்குள் புதைந்துகிடந்தன
தொடர்புகொள்ளப்படாத
எண்கள் பல.

விரைந்தோடும் காலநதியில்
எப்பொழுதாவது பளிச்சிட்டன
மறக்கப்பட்ட எண்கள்.

ஏதோவொரு நபருக்கான
தேடலில் ஆழ்ந்திருக்கையில்
கண்முன் தோன்றி மறைந்தன
முகம்மறந்த எண்கள்.


காலச்சுழற்சியில் தொலைந்த
நண்பர்களின் நினைவுகளை
ஊமையாய் உள்ளிருந்து
நினைவூட்டிக்கொண்டே இருந்தன
அழிக்கப்படாத எண்கள்..


எதிர்பாரா கணத்தில்
தொலைந்துவிட்ட அலைபேசிக்குள்
மரித்துப்போயின அழைக்கப்படாத
எண்களும் அர்த்தமிழந்த நட்புகளும்.

(வடக்குவாசல் டிசம்பர் 2008 இதழில் வெளியாகிய கவிதை)

9 comments:

said...

Migavum arumai...Mutrilum unmai..

said...

நல்ல கவிதை நிலா...தொலைந்து போனது அலைபேசி மட்டும் அன்று அன்பான அன்பற்ற நபர்கள் கூட, இல்லையா? தேடினால் கிடைக்காதது எதுவுமில்லை...அலைபேசி கிடைக்க வாழ்த்துக்கள்.

Anonymous said...

migavum arumai...

said...

காலச்சுழற்சியில் தொலைந்த
நண்பர்களின் நினைவுகளை
ஊமையாய் உள்ளிருந்து
நினைவூட்டிக்கொண்டே இருந்தன
அழிக்கப்படாத எண்கள்..

எதிர்பாரா கணத்தில்
தொலைந்துவிட்ட அலைபேசிக்குள்
மரித்துப்போயின அழைக்கப்படாத
எண்களும் அர்த்தமிழந்த நட்புகளும்

அருமை ...

said...

migavum arumai. Mikka Nandri....neengal solluvadhu unmaiyae.

Anonymous said...

Hi,

Good Poem and has true value

Regards,
Praharika

Anonymous said...

hei epdi saathaarana vishayathaiyum asaathaaranamaga vilambukireergal

Anonymous said...

hei epdi saathaarana vishayathaiyum asaathaaranamaga vilambukireergal

said...

nallaayirukku!!