Monday, October 03, 2011

ஒலிவடிவ பறவைகள்


அறையெங்கும் ஒலி நிரப்பும்
தாரிச்சிட்டிலிருந்து
உதிர்கின்ற சொற்கள் சிறகு முளைத்து
காற்றில் அலைந்து திரிகின்றன.
பிரபஞ்சத்தின் முடிவுறா இருளில்
அவை ஒலிவடிவ பறவையாக
பறந்து பறந்து களிப்படைந்து,
சொற்களற்ற மெளனத்துடன்
என் தோளில் வந்தமர்கின்றன.
ஆத்மார்த்த பேரன்புடன் அதனுடன்
உரையாட துவங்குகிறேன்.
ரகசியமான தருணமொன்றில்
அதன் சுதந்திரத்தின் சிறகுகளை
நான் கத்தரித்துவிட்டதை
அறியாமல் தினம்
தொடர்கிறது மொழியற்ற
உரையாடல்.

[இவ்வார கல்கியில் வெளியான கவிதை]

[வீட்டிற்கு புதிதாய் வந்துள்ள செல்லப்பறவைகள் செம்பருத்தி,செம்பரிதி இருவருக்கும்]

-நிலாரசிகன்.

7 comments:

said...

m....nallaayirukku nila.

paravaikalin name innum nallaayirukku.

vaazhthukal.

said...

கவிதை அருமை.
கல்கியில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

Beautiful...

Regards,
J
http://mycreationz.wordpress.com/

said...

அருமையான கவிதை. வாழ்த்துக்கள். :)

said...

மிக அழகான கவிதை வரிகளுடன் பறவையை ரசித்தேன். வாழ்த்துக்கள் நண்பா! :)

said...

உன் வீட்டிற்கு வந்த பறவைகளுக்கும் வரவேற்பா, செய்தியும் கவிதையும் அருமை! கல்கியின் வெளீயீடுக்கு வாழ்த்துக்கள் நண்பா!

said...

அருமையான கவிதை..

கல்கியில் வெளியானமைக்கு வாழ்த்துக்கள்.