Sunday, July 22, 2007

ஊமச்சி

எம் பேரு ஊமச்சி

பேச்சு ஒண்ணும்
கெடயாது
காதுரெண்டும்
கேட்காது

குயில பாத்திருக்கேன்
குயில்பாட்டு
கேட்ட‌தில்ல‌

சின்ன‌புள்ளைக‌ சிரிப்ப‌
பாத்திருக்கேன்
எச்சிவாயி ம‌ழ‌லை
பேச்சி கேட்ட‌தில்ல‌

பள்ளிக்கூட‌ம் போன‌தில்ல‌

என் சைக‌ மொழி
புரியாம‌ வேலைவெட்டி
கிடைச்ச‌பாடில்ல‌

க‌ஞ்சித்த‌ண்ணி குடிக்க‌
வ‌ழியுமில்ல‌

வ‌யுத்துக்கு வ‌ய‌சாக‌ல‌
ஒட‌ம்புக்கு ஆகிப்போச்சு
ஆடியோட‌ முப்ப‌து

க‌ஞ்சுக்கே வ‌ழியில்ல‌
க‌ல்யாண‌த்துக்கு
ஆள்தேடி ஊர் ஊரா
அலையுது
ஆத்தாகெள‌வி
ஊம‌ச்சிய க‌ட்டிக்க‌
உள்ளூருல ஆளில்ல‌

செவிட்டுபுள்ள‌ன்னு
சொல்லிட்டுப்போனான்
செக்க‌ம்ப‌ட்டி சின்ன‌ராசு

ஊமச்சிய‌ க‌ட்டிக்கிட்டா
பொற‌க்குற‌ புள்ள‌குட்டிக்கும்
பேச்சுவ‌ராதுன்னு ஜோசிய‌ம்
சொல்லிச் சிரிச்சுட்டுப்போனான்
துரையூரு முத்துச்சாமி

க‌ட்டிக்கிட்டா என்ன‌
வெச்சுக்கிட்டா என்ன‌
ஊம‌ச்சிக்கு ஏது ம‌ன‌சுன்னு
நென‌ச்சு ந‌டுவூட்டுல‌
நாற்காலி போட்டு
உட்கார்ந்தான்
உள்ளூரு மைன‌ரு

ஆத்தாவுக்கு ஒண்ணும்
புரியல‌
எங்கப்பன் போட்டோவுக்கு
முன்னால நின்னு
அழுவுது

மெதுவா தலைய
உசத்தி என்ன‌
பார்த்து ஏதோ
கேட்டா என்ன‌
பெத்த ஆத்தா.

பெட்டி படுக்கைய‌
எடுத்துகிட்டு
மைனருகூட
புல்லட்டு வண்டியில‌
ஏறிபுட்டேன்.

இந்த ஊமச்சிக்கு
மனசு இருக்கறது
ஊரு ஒலகத்துக்கு
தெரியாது

ஆனா
இந்த ஊமச்சிக்கு
வயிறு பசிக்கும்னு
எங்க ஆத்தாவுக்கு
ம‌ட்டுந்தான்
தெரியும்.

ஒத்த‌ வேள‌
க‌ஞ்சிக்கு
ப‌த்துவேள‌
பாய‌விரிக்க‌ற‌து
த‌ப்பா ரைட்டான்னு
தெரிய‌ல‌...

இடி விழுந்தா
கூட‌ கேட்காத‌
காதுக்கு
பொல‌பொல‌ன்னு
எங்க‌ ஆத்தா
சிந்த‌ற‌ க‌ண்ணீருசத்தம்
ம‌ட்டும் கேட்டுக்கிட்டே
இருக்கு!

-நிலார‌சிக‌ன்

6 comments:

said...

A very touching poem. I liked it immensely.

Anonymous said...

It's very nice apdinu sollitu poga mudiyala. Manasaa, illa vayathu pasiyanu paakkum potu, vayeru than peresu nu tonuthu. pasi kodumaya anubavechatu illainalum, pakkatula iruntu patturukkan. Manasin valiyai veda vayettru pasi peresunu sollitu irukku inta kavithai. padichu oru mani neram aana piragum, unarkeren anta valiyai. No words to say about this..

Kavithaigaludan,
Nila.

said...

//A very touching poem. I liked it immensely. ..//

நன்றி சபாபாதி :)

//Manasin valiyai veda vayettru pasi peresunu sollitu irukku inta kavithai. padichu oru mani neram aana piragum, unarkeren anta valiyai. No words to say about this..
//

சரியாக புரிந்துகொண்டீர்கள் நிலா.
இக்கவிதையின் கரு இரு விசயங்கள்.
ஒன்று அவளின் வறுமை
மற்றொன்று அவளின் ஊனம்.

இந்த முடிவு ஏன் என்று சிலர் கேட்கிறார்கள்...
இதுபோல் நடப்பது நிஜம் என்று உலகறியவே இந்த முடிவை கவிதையாக்கினேன்.

நன்றி.

Anonymous said...

"oru velai kanjikku pala thadavai paai virikira........." endra varigal manusula solla mudiyatha alavu ganathai athiga paduthiruchu nilaraseegan.....-nirandhari.

said...

ம்ம்ம்.. நல்ல கவிதை..keep it up :-)

said...

Manam miga valithadhu.