Thursday, September 06, 2007

காதலின்றி வேறில்லை


1.இலையில் தங்கிய
மழைத்துளியில்
முகம்பார்த்துக்கொள்ளும்
பூக்கள்போல்
வெட்கத்தில் உள்ளங்கையில்
முகம்புதைக்கிறாய்
நீ.

2.ஓடி வந்து கால்கள்
கட்டிக்கொள்ளும் குழந்தை
போல் கட்டிக்கொள்வாயா
உனக்காக நான் சுமந்து
திரியும் காதலை?


3. உன்முகம்போல் ஜொலிக்க
முடியவில்லையே என்கிற
ஏக்கத்தில்,
ஒளித்துளிகளை கண்ணீராய்
சிந்திக்கொண்டிருக்கிறது
நீ
பற்றியிருக்கும் கம்பி மத்தாப்பு!

4. உன்னை கொஞ்சுவதுதான்
நான் செய்யும் மிகப்பெரிய
வேலை என்று
என்னிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறது
நம் காதல்.

8 comments:

Anonymous said...

alavukku athigamaga rasithane ungal "Kadhalindri verillai " yenkira kavithai kuzhanthaiyinai.....


ungalin intha azhagana pani yendrum thodara vaazhthum anbu thamizhachi.
Snegamudan,
Nirandhari
Coimbatore

Anonymous said...

வார்த்தைகள் எளிமை. சொல்லியிருக்கும் விதம் அழகு.
காதலியின் வெட்கம் சொன்ன விதம் அருமை.

நிலவின் நினைவில்,

said...

கவிதை அருமையாகவும் உண்மையாகவும் உள்ளது.

Anonymous said...

arumai romba nalla vanthu irukku

en illiya nilla vukku parratu

said...

//ஓடி வந்து கால்கள்
கட்டிக்கொள்ளும் குழந்தை
போல் கட்டிக்கொள்வாயா
உனக்காக நான் சுமந்து
திரியும் காதலை?///

மிகு அழகு.வாழ்த்துக்கள்.

said...

//இலையில் தங்கிய
மழைத்துளியில்
முகம்பார்த்துக்கொள்ளும்
பூக்கள்போல்//

என்ன ஒரு உவமை?!
கலக்கிட்டீங்க!!

Anonymous said...

Really Superb

ungal rasigan
K.Subash

said...

hello sir

thank u for giveing that gudd kavithai for
u

i love u sir