Thursday, September 20, 2007

தில்லி To ஆக்ரா

"என்னங்க நாம எப்போ தாஜ்மஹால பார்க்க போறோம்?" ஆர்வமுடன் கணவனிடம் கேட்டாள் கனகம்.
"அடச்சே உன்னோட இதே வம்பா போச்சு ரெண்டு நாளா எப்ப வாய திறந்தாலும் தாஜ்மஹால் தாஜ்மஹால் ....மனுசன நிம்மதியா இருக்க விடமாட்டியா?" கோபத்துடன் கத்தினான் வாசுதேவன்.

"நம்ம பக்கத்துவீட்டு பஞ்சாப்காரி போய் பார்த்துட்டு வந்து என்னமா பேசுறா,என்னால சகிக்க முடியலிங்க "

"அவ புருசன் சர்கார்ல வேல பாக்குறான் டீ, என்னை மாதிரி குதிரைவண்டியா ஓட்டுறான் ?"
"

என்னைக்குத்தான் நீங்க நான் கேட்டு சரின்னு சொல்லியிருக்கீங்க" அழ ஆரம்பித்துவிட்டாள் கனகம். ""சரி சரி உடனே கண்ணுல தண்ணி வந்துருமே? நாளைக்கு காலைல போலாம்" சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
மறுநாள் அதிகாலை உற்சாகமாய் எழுந்து உணவு தயார்செய்தாள் கனகம்.

தாஜ்மஹாலை நோக்கி ஆரம்பித்தது அவர்களது பயணம்

"எம்மாம் பெருசுங்க...என்னால நம்பவே முடியலை ... சாமி எப்படித்தான் கட்டினாங்களோ?" ஆச்சர்யத்துடன் தாஜ்மஹாலைக் கண்டு வாய்பிளந்தாள் கனகம்.

தாஜ்மஹால் அருகே திடீரென்று பரபரப்பு ஏற்பட்டது

"வழிவிடுங்கள்...ஓரம்போங்கள்" என்று எல்லோரையும் அதட்டிக்கொண்டே சென்றனர் குதிரையில் சென்ற இருவர்.

வெண்நிற குதிரையொன்றில் பரிவாரங்கள் சூழ தாஜ்மஹால் நோக்கி சென்றுகொண்டிருந்தார் ஷாஜஹான்.

3 comments:

said...

good one.

said...

//வெண்நிற குதிரையொன்றில் பரிவாரங்கள் சூழ தாஜ்மஹால் நோக்கி சென்றுகொண்டிருந்தார் ஷாஜஹான்.
//
I read it twice still I could not able to understand exactly....May be I misunderstood something. Could u please...

said...

//I read it twice still I could not able to understand exactly....May be I misunderstood something. Could u please...//

ராஜா தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி.
இந்தக் கதை நடந்த காலம் ஷாஜஹான் வாழ்ந்த காலம்.

இப்போது புரிகிறதா? :)