1.நகம் பெயர்த்த கல்லில்
விட்டுவந்தேன் என்
ரத்தத்தின் சுவடுகளை.
2.கால்நடைகளின் தடங்களில்
தேங்கி இருந்தது மழைநீர்
வறண்ட ஆற்றின் நடுவில்.
3.செம்மறி ஆடுகளின்
பின்னால் செல்கிறான்
பள்ளிகண்டிராத சிறுவன்.
4. வேர்நனைக்கும் நதிக்கு
பூமுத்தங்களை பரிசளிக்கிறது
நதியோர வேப்பமரம்.
5.அறிமுகமாகாத மனிதர்களுக்கும்
கையசைத்து மகிழ்கின்றனர்
ரயில்நிலைய பைத்தியங்கள்.
6.புழுதிபடர்ந்த பூக்களிலும்
தேனெடுக்க வந்தமர்கின்றன
பட்டாம்பூச்சிகள்.
7.கடற்கரையில் பறக்கின்ற
பட்டங்களுடன் போட்டிபோடுகின்றன
சுண்டல் விற்ற தாள்கள்.
8.அடித்து துவைக்கிறாள்
கைநீட்டிய கணவனின்
சட்டையை.
3 comments:
நச் கவிதைகள்...
( ஒரு வரியில் ஓராயிரம் கருத்துச் சொல்லும் உம் கவிதைக்கு ஏற்ப விமர்சனம் அமைய வேண்டும் என்பதாலேயே இந்த ஒற்றை வரி பின்னூட்டம்..)
மிக்க நன்றி ராஸா.
சிலிர்க்கவைக்கின்ற...
தினேஷ்
Post a Comment